பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ்.. மேடையில் இப்படி கலங்கிட்டாங்களே.. டைட்டிலுக்கு வொர்த்துதான்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நேற்றோடு முடிவடைந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்ந்தெடுக்கப்படார். ரன்னர் அப்பாக சபரியும், இரண்டாவது ரன்னர் அப்பாக விக்கல்ஸ் விக்ரமும் தேர்வானார்கள். டைட்டிலை அடித்த திவ்யாவுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தார்கள். பிக்பாஸ் கோப்பையை பெற்ற பிறகு திவ்யாவின் உருக்கமான பேச்சு அனைவரையும் நெகிழ் செய்தது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. முதலில் சோஷியல் மீடியாக்கள் மூலம் பிரபலமானவர்களை போட்டியாளர்களாக உள்ளே அனுப்பியது சேனல். அது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இவர்கள் எப்படி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார்கள் என்ற சந்தேகத்தையும் கிளப்பினார்கள். ஆனால் அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு கன்டென்ட்டுகளை கொடுத்தார்கள். அதனையடுத்து வைல்டு கார்டு என்ட்ரி மூலம் திவ்யா கணேஷ், பார்கவ், சாண்ட்ரா, பிரஜின் ஆகியோர் உள்ளே வந்தார்கள்.

ட்விஸ்ட் அண்ட் டர்ன்: அவர்களும் உள்ளே வந்த பிறகு நிகழ்ச்சி பல ட்விஸ்ட்டுகளையும் டர்னுகளையும் பார்த்தது. முக்கியமாக டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது சாண்ட்ராவை விஜே பார்வதி எட்டி உதைக்க; அவருக்கு கம்ருதீன் உதவி செய்ய; அதிர்ச்சியடைந்த பலரும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். பிக்பாஸும், தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் உடனடியாக ரெட் கார்டு கொடுத்து அவர்களை வெளியேற்றினார்கள்.

Bigg Boss Tamil 9 Winner Divya Ganesh Bags Trophy Rs 50 Lakh and Car Here s Her Emotional Speech
Photo Credit:

இறுதிக்கு முன்னேறிய நான்கு பேர்: தொடர்ந்து டைட்டில் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத்தும் பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். இறுதியாக திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், அரோரா ஆகிய நான்கு பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்கள். இந்த நான்கு பேரில் யார் டைட்டிலை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. அந்த இறுதி எபிசோட் நேற்று ஒளிபரப்பானது.

திவ்யா கணேஷ் டைட்டில் வின்னர்: நேற்று நடந்த நிகழ்ச்சியில் நான்காவது இடத்தை அரோரா பிடித்தார். மூன்றாவது இடத்தை விக்கல்ஸ் விக்ரமும், ரன்னர் அப்பாக சபரிதாதனும் தேர்வாகினார்கள். இந்த சீசனின் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிக்பாஸ் கோப்பை, 50 லட்சம் பணம், விக்டோரிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ஒரு நாளைக்கு 30,000 ரூபாய் வீதம் இத்தனை நாட்கள் இருந்ததற்கான ஊதியம் ஆகியவைகள் வழங்கப்பட்டன. மொத்தம் அவர் 70 லட்சம் ரூபாய் சம்பாத்திருப்பதாக கூறப்படுகிறது.

கலங்கிய திவ்யா: கோப்பையை வென்ற திவ்யா கணேஷ் பேசுகையில், 'நான் நானாக இருந்ததற்காக இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. பல வேடங்கள் ஏற்ற்றிருக்கிறேன். எனக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறேன். ஒருகட்டத்தில் அடுத்தவர்கள் வாங்கும் விருதை தொட்டு பார்க்க ஆசை வரும். ஆனால் அப்படி நான் செய்ததில்லை" என கலங்கியபடி பேசினார். இதனை பார்த்த ரசிகர்களோ, வீட்டுக்குள் இருந்தபோது தனது செயல்பாடுகளால் மக்கள் மனதை வென்றார்; இப்போது தனது பக்குவமான பேச்சால் வெல்கிறார். இந்த டைட்டிலுக்கு முழுக்க முழுக்க திவ்யா கணேஷ் தகுதியானவர்தான் என கமெண்ட்ஸ் செய்து வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X