பிக்பாஸ் டைட்டில் வென்றது முதல் விஜே பார்வதி ரெட் கார்டு பெற்ற டாஸ்க் வரை.. மனம் திறந்த திவ்யா கணேஷ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனின் டைட்டிலை திவ்யா கணேஷ் தட்டி சென்றார். அவர் வெற்றி பெற்றது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் அவரது கரியர் மேற்கொண்டு உயரம் செல்லலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற பிறகு முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் திவ்யா கணேஷ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோராக தொடங்கியது. எப்போதும் வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்களை அதிகம் வீட்டுக்குள் அனுப்பும் நிகழ்ச்சி குழு; இந்த முறை ஒரு மாறுதலாக சோஷியல் மீடியா மூலம் வெகுவாக பிரபலமடைந்தவர்களை அதிகம் அனுப்பியது. முதற்கட்டமாக வீட்டுக்குள் போன போட்டியாளர்களைத் தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்களான திவ்யா கணேஷ், சாண்ட்ரா, பிரஜின், பார்கவ் உள்ளிட்டோர் வீட்டுக்குள் சென்றார்கள்.
மனங்களை வென்ற திவ்யா கணேஷ்: வீட்டுக்குள் சென்றதிலிருந்து திவ்யா கணேஷின் கேம் அனைவராலும் ரசிக்கும்படியாக இருந்தது. சக போட்டியாளர்கள் யாரேனும் எல்லை மீறி நடந்துகொண்டால் அவர்களை கண்டிப்பது முதல் பல விஷயங்களை செய்தார். முக்கியமாக சாண்ட்ராவை விஜே பார்வதியும், கம்ருதீனும் எட்டி உதைத்தபோது கொந்தளிப்பின் உச்சத்துக்கே சென்று பார்வதியை விட்டு கிழித்துவிட்டார். அவரது அந்த செயல்பாடும் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியிலும் அவரது மதிப்பை கூட்டியது.

டைட்டில் வென்ற திவ்யா கணேஷ்: இப்படி மக்கள் மத்தியில் கூடிய அவரது மதிப்பால்தான் அவர் பிக்பாஸ் டைட்டில் வின்னராக மாறினார் என்றும் கருதப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் பரிசுத்தொகை 50 லட்சம், விக்டோரிஸ் கார் என மொத்தம் 90 லட்சம் ரூபாய்வரை சம்பாதித்திருக்கிறார் திவ்யா. அதுமட்டுமின்றி பிக்பாஸில் பெற்ற வெற்றி அவரது திரை வாழ்க்கைக்கும் பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வென்ற பிறகு முதன்முறையாக விஜய் டிவியின் இன்ஸ்டாகிராம் பேஜில் லைவில் வந்தார் திவ்யா.
திவ்யாவின் பேச்சு: அவர் அதில் பேசுகையில், "பிக்பாஸ் டைட்டிலை வெல்வேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மக்களுக்கு முதலில் நன்றி. அவர்கள் கொடுத்த இந்த வெற்றிக்கு தகுதியானவள் என்பதை நான் நிரூபிப்பேன். பிக்பாஸ் வீடு எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. பொதுவாக நான்கு பேருக்கு மேல் எனக்கு சமைக்க தெரியாது. ஆனால் அங்கே 10க்கும் மேற்பட்டோருக்கு சமைக்க கற்றுக்கொண்டேன். வெளியே வந்த பிறகு எபிசோடுகளை பார்க்கவில்லை. யார் யார் என் பின்னாடி என்னென்ன பேசினார்கள் என்பதை பார்க்கப்போவதில்லை. அதை ஏன் திரும்பி பார்க்க வேண்டும்.
பிடித்த டாஸ்க்: பொதுவாக நான் எளிதாக ஹர்ட் ஆகிவிடுவேன். யாராவது என்னை காயப்படுத்தினால் அதை உள்ளேயே வைத்துக்கொண்டு வருத்தப்படுவேன். இப்போது போட்டி முடிந்த பிறகு எல்லோருடனும் நான் சகஜமாகவே பழகுவேன். பிக்பாஸ் போட்டியில் எனக்கு பிடித்த டாஸ்க்குகள் என்றால் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கும், ராஜா ராணி டாஸ்க்கும்தான். எனக்கு நிறைய பொறுப்புகள் கூடியிருக்கிறது என்பது தெரியும்" என்றார்.


Click it and Unblock the Notifications











