Bigg Boss 9 - பிக்பாஸ் டைட்டில் வென்ற கையோடு திவ்யா கணேஷ் செய்தது.. மேடம் இவ்வளவு ஸ்பீடா இருக்காங்களே

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் டைட்டில் வின்னராக மாறியிருக்கிறார் திவ்யா கணேஷ். அவர் வென்றதையடுத்து அனைவரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இந்த பிக்பாஸ் மூலம் சம்பளம், பரிசு தொகை, காரின் மதிப்பு என அனைத்தையும் சேர்த்து மொத்தம் கிட்டத்தட்ட 95 லட்சம் ரூபாய்வரை சம்பாதித்திருக்கிறார் திவ்யா. இந்நிலையில் டைட்டில் வென்ற கையோடு அவர் செய்திருக்கும் செயல் ஒன்று ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கியபோது; இந்த சீசன் கண்டிப்பாக போர் அடிக்கும் என்றே பல ரசிகர்களால் கணிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் போட்டியாளர்களில் பிரவீன் காந்தியை தவிர மற்ற அனைவருமே சோஷியல் மீடியாக்கள் மூலம் மக்களிடம் கவனத்தை ஈர்த்தவர்கள். சில வாரங்களுக்கு பிறகு வைல்டு கார்டு என்ட்ரியாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், பார்கவ் ஆகியோர் போட்டியாளர்களாக வீட்டுக்குள் சென்றார்கள்.

சுவாரஸ்யமான நிகழ்ச்சி: அவர்களும் உள்ளே சென்ற பிறகு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக மாற ஆரம்பித்தது. சந்தோஷம், துக்கம், கோபம் என அனைத்தும் மாறி மாறி வீட்டுக்குள் நடந்தன. போட்டியாளர்களுக்குள் நடந்த சண்டைகள் சில சமயம் எல்லை மீறி போயின. அப்படி டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது சக போட்டியாளர் சாண்ட்ராவை விஜே பார்வதி எட்டி உதைத்தார். அவருக்கு கம்ருதீன் ஆதரவாக இருந்தார். எனவே இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

Bigg Boss Tamil 9 Winner Divya Ganesh s Post-Win Move Grabs Attention on Social Media
Photo Credit:

இறுதிக்கு சென்ற நான்கு பேர்: விஜே பார்வதி, கம்ருதீன் வெளியேற்றத்தை தொடர்ந்து சாண்ட்ரா, சுபிக்‌ஷா எவிக்ட் ஆக; கானா வினோத் பண பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இறுதியில் திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், அரோரா ஆகிய நான்கு பேரும் ஃபைனலிஸ்ட்டாக மாறினார்கள். இவர்களில் யார் இந்த சீசனின் டைட்டில் வின்னராக மாறுவார் என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்தது. வெற்றியாளரை அறிவிக்கும் இறுதி எபிசோடில் விஜே பார்வதி, கம்ருதீனும் கலந்துகொண்டார்கள்.

டைட்டில் அடித்த திவ்யா கணேஷ்: இந்த சீசனில் நான்காவது இடத்தை அரோராவும், செகண்ட் ரன்னர் என்ற பொசிஷனை விக்கல்ஸ் விக்ரமும் பெற்றார்கள். ரன்னர் அப்பாக சபரிநாதன், டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டார்கள். திவ்யா வெற்றி பெற்றது அனைவருக்குமே மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை, இத்தனை நாட்கள் இருந்ததற்கான சம்பளம், விக்டோரிஸ் கார் ஆகியவைகள் வழங்கப்பட்டன.

திவ்யா கணேஷ் செய்தது: டைட்டிலை வென்ற திவ்யா பேசுகையில், 'நான் நானாக இருந்ததற்காக இந்த ட்ராஃபி கிடைத்திருக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சி' என எமோஷனலாக கூறினார். இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வென்றதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரிகளாக வைத்து தள்ளுகிறார். அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும், அவரை புகழ்ந்தும் சோஷியல் மீடியாவில் பதிவிட்ட பதிவுகளை வரிசையாக் வைத்துவருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X