சட்டை பட்டனை கழட்டி நச்சுனு போஸ் கொடுத்த பூர்ணிமா ரவி.. பட வாய்ப்புக்காக இப்படியா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை பூர்ணிமா ரவி, தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு ஹாயாக காற்று வாங்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், சில ரசிகர்கள் கவர்ச்சி வேண்டாம் என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

1995ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த பூர்ணிமா ரவி, அங்கேயே பள்ளி படிப்பை முடித்த இவர், ஐடியில் கல்லூரி படிப்பை முடித்தார். இதைத்தொடர்ந்து ஐடி கம்பெனி ஒன்றில் 25 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்த்து வந்த பூர்ணிமாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், சொந்தமாக அராத்தி என்ற யூட்யூப் சேனலை தொடங்கினார். அதில், தனது நடன வீடியோக்கள், தனது புதிய யோசனைகளை பதிவு செய்து வந்தார். இவர் பதிவிடும் வீடியோக்கள் க்ரியேட்டிவான எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் அதை விரும்பி பார்த்தனர்.

poornima ravi photo

நடிகை பூர்ணிமா ரவி: யூட்யூப் மூலம் கிடைத்த ரெஸ்பான்ஸை அடுத்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்க பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமான ஹே சண்டைக்காரி என்கிற ஒரு சில வெப் சீரிஸ்களிலும் நடித்தார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்த பூர்ணிமா ரவிக்கு ப்ளான் பண்ணி பண்ணனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அதில், பால சரவணனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா நடித்த அண்ணப்பூரணி படத்தில் அவரின் தோழியாக நடித்திருந்தார்.

பிக் பாஸ் : இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக சென்ற பூர்ணிமா, மாயாவுடன் சேர்ந்து கொண்டு பிரதீப் ஆண்டனிக்கு எதிராக போர் கொடி தூக்கினார். இருந்தாலும், பிக் பாஸ் வீட்டில், 96வது நாள் தாக்கு பிடித்த இவர் 16 லட்சம் ரூபாயுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுமட்டுமில்லாமல், 96 நாட்கள் வீட்டில் இருந்ததற்காக, 30 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

poornima ravi photo

கவர்ச்சிக்கு கிரின் சிக்னல்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு, செவப்பி என்கிற படம் மட்டுமே வெளியானது. தற்போது எந்த வாய்ப்பும் வராததால், இணையத்தில் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில், சட்டை பட்டனை கழட்டி விட்டு, கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்தாலும், சிலர் திறமையை மட்டும் நம்புங்கள் கவர்ச்சி எதுக்கு என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

poornima ravi photo

தனுஷை பிடிக்கும்: அண்மையில் இவர் அளித்த பேட்டியில், படுக்கையறை காட்சிகளில் நடிப்பதில் தவறவில்லை, அது கதையுடன் ஒன்றி இருக்க வேண்டும் என்றார். மேலும், ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் அதில் நாம் கருத்து சொல்ல முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் என்றும், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் அவர் செல்வது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X