Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சம்யுக்தா போன உடனே.. ஒரே குருப்பா ஆகிட்டாங்களோ.. நல்லதுக்கு இல்லையே.. வைரலாகும் அன்சீன் புரமோ!
சென்னை: சம்யுக்தா இருந்த வரை இரு அணிகளாக பிக் பாஸ் வீடு இருந்த நிலையில், தற்போது பாலாவும் லவ் பெட் கேங்கில் வந்து இணைந்து கொண்டார் என்றே தெரிகிறது.
பாலாஜி முருகதாஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் காதல் கானா பாட்டுக்கு ஆடிப் பாடி மகிழ்வது தற்போது வெளியாகி உள்ள அன்சீன் புரமோவில் வெளியாகி உள்ளது.
குறும்படத்தை ஒத்துக்க மாட்டேன்.. ஆரி பேசுனது ரொம்ப தப்பு.. வெளியேறியும் வீம்பு பண்ணும் சம்யுக்தா!
இரண்டு டீம்
பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் வேல் கேங் மற்றும் போஷ் கேங் என இரண்டு பெரிய டீம் இருந்து வந்தது. அர்ச்சனா தலைமையில் ஒரு அணியும், சம்யுக்தா தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வந்தன. அர்ச்சனா அணியில் ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், சோம், கேபி உள்ளிட்டோரும், சாம் அணியில் பாலா, ஷிவானி, ஆஜீத்தும் இருந்தனர். அப்பப்போ, ரம்யா, அனிதா, சனம் சேர்ந்து கொள்வார்கள்.
சம்யுக்தா எலிமினேஷன்
பாலாவுக்கு பக்க பலமாக இருந்த சம்யுக்தாவை, அழகா அனிதா சம்பத்தை இறக்கி கடந்த வாரம் எலிமினேஷன் பண்ணிட்டாங்க.. இதனால், வலுவிழந்ததாக உணரும் பாலா ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார். ஷிவானி, ஆஜீத்தை இனியும் நம்பி பிரயோஜனம் இல்லை என்று நினைத்த அவர், அர்ச்சனா கேங்கில் ஐக்கியமாகும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
அடிக்கடி லவ் பெட்டுக்கு
லவ் பெட் வச்சுக்கிட்டு குரூப்பா குரூபிசம் பண்றாங்கன்னு புகார் சொல்லி வந்த பாலா, இப்போ அடிக்கடி லவ் பெட் பக்கமே போயிட்டு வருகிறார். அர்ச்சனாவின் அரவணைப்பு இந்த நேரத்தில் நாமினேஷனில் இருந்து தப்பிக்க பாலாவுக்கு ரொம்பவே தேவைப் படுவதால், அங்கேயே சீக்கிரம் செட்டில் ஆகிவிடுவார் என்றே தெரிகிறது.
அன்சீன் புரமோ
இந்நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக தற்போது வெளியான அன்சீன் புரமோவில், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஒன்றாக கூடி கானா பாட்டு பாடுவதும், பாலா சோம் போடும் தாளத்திற்கு எழுந்து ஆடுவதுமாக அன்சீன் புரமோ அமைந்துள்ளது. பிக் பாஸ் வீட்டை இப்படி பார்க்க கலர்ஃபுல்லாக இருந்தாலும், ரசிகர்களுக்கு தேவை சண்டையும் சர்ச்சைகளும் தான்.
காதல் கானா
சுசித்ரா பிக் பாஸ் வீட்டில் இஷ்டத்துக்கு பாடல் வரிகளை போட்டு பாடல்களை உருவாக்கி பாடி வந்த நிலையில், சூப்பர் சிங்கர் ஆஜீத் இப்போ பாலாவுக்காக சூப்பரான காதல் கானா ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த சாங்க கேட்டு ஆகலாம் டா நீ வேக்கப்பு என பாலாவும் ஆஜீத்தும் பாடுவது சூப்பர். ஆரியும் கூட சேர்ந்து என்ஜாய் பண்றார். சனம் ஷெட்டி என்ன பிரச்சனையை கிளப்பலாம் என யோசிக்கிறார் போல தெரிகிறது.
மாறக்கூடாது
மூன்றாவது புரமோவில் கேக் வெட்டும் போது கூட, யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி என சொன்ன பாலா, அடுத்த நொடியே பிக் பாஸ் புரமோவுக்காக ஆனால், திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுவேன் என சொல்லி டிஆர்பி கிங் என நிரூபித்துள்ளார். பாலா நல்லவனா மாறி திருந்திட்டா, அப்புறம் ஆரிக்கும் மத்தவங்களுக்கும் வேலையே இருக்காது. பார்ப்போம் நம்பியார் பிக் பாஸ் அப்படியெல்லாம் திருந்த விடமாட்டார்.