Bigg Boss Tamil - பிக்பாஸ் 7 வீட்டுக்குள்ள போறது ஏழரை.. அலப்பறை கிளப்பிய கூல் சுரேஷ்
சென்னை: Bigg Boss Cool Suresh (பிக்பாஸ் கூல் சுரேஷ்) பிக்பாஸ் சீசன் 7ல் முதல் ஆளாக வீட்டுக்குள் நுழைந்தார் கூல் சுரேஷ்.
டிவி ஷோக்களில் ரொம்பவே பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்று முதல் ஏழாவது சீசன் தொடங்கவிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆனாலே மற்ற சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் அடிவாங்கும் நிலை உருவாகும். எனவே அதனை தக்க வைப்பதற்காக இந்த சீசனில் பல புது முயற்சிகளை சேனல் நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்த முறை இரண்டு வீடுகளில் போட்டி நடக்கவிருக்கிறது.

போட்டியாளர்கள்: பிக்பாஸ் சீசன் 7க்கான போட்டியாளர்கள் லிஸ்ட் ஒன்று கசிந்துள்ளது. அதில், கூல் சுரேஷ், பாடகர் யுகேந்திரன், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா, சீரியல் நடிகை ரவீனா, விஜே அர்ச்சனா, நடனக் கலைஞர் விஜய் வர்மா, ரியாஸ்கான் மனைவி நடிகை உமா ரியாஸ், சுழல் வெப்சீரிஸ் நடிகர் ஜான்சன், காமெடி நடிகர் பாலசரவணன், யூட்யூபர் பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் போட்டியில் இருக்கின்றனர்.
தொடங்கிய பிக்பாஸ் 7: சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இரண்டு வீடுகளில் நடக்கவிருக்கும் இந்த சீசனின் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரை கமல் ஹாசன் வாழ்த்தி அனுப்பிவைத்தார். கூல் சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்ததும் அதனை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டார். பிறகு கன்ஃபெஷன் ரூமுக்கு பிக்பாஸ் அழைத்து ரூல்ஸ்களை கூறினார்.
பிக்பாஸுடன் பேசிய கூல் சுரேஷ்: கன்ஃபெஷன் ரூமுக்கு வந்த அவரிடம் பிக்பாஸ் பேசுகையில், "இத்தனை சீசன்களில் முதலில் வீட்டுக்குள் வந்து தெளிவா பதில் சொன்னது நீங்கள்தான். அதேபோல் இந்த சீசனின் முதல் கேப்டன் நீங்கள்தான்" என்றார்.
எமோஷனல் கூல் சுரேஷ்: வீட்டுக்குள் போவதற்கு முன்னர் கூல் சுரேஷ் தொடர்பான வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய கூல்ச் உரேஷ், "என்னை ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் பெற்றோர் வளர்த்தார்கள். நான் கார்ப்பெண்ட்டர் வேலை பார்த்தேன், நியூஸ் பேப்பர் போட்டேன். பிறகு சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வந்தேன். அதிர்ஷ்ட தேவதை இந்த நிகழ்ச்சியின் மூலம் எனது அருகில் வருவார் என்று நம்புகிறேன். எனக்கு சப்போர்ட் செய்த சிம்புவின் ரசிகர்களுக்கும், சந்தானத்தின் ரசிகர்களுக்கும் ரொம்பவே நன்றி" என்றார்.
அதனையடுத்து கமலிடம் பேசிய சுரேஷ், நான் முதல் போட்டியாளராக போகப்போவதை நினைத்தால் பதற்றமாகத்தான் இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 உள்ள போறது ஏழரை. என்ன நடக்கப்போகுதோ. வெந்து தணிந்தது காடு கமல் சாருக்கு வணக்கத்தை போடு என்று தனது ட்ரேட் மார்க் வசனத்தை பேசிவிட்டு உள்ளே சென்றார்.


Click it and Unblock the Notifications











