ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.. எங்கிட்ட அவ்ளோ பணம் இல்லை.. காருக்குள் இருந்து வீடியோ போட்ட அமீர்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடன அமைப்பாளர் அமீர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனியுடன் இணைந்து டைட்டிலையும் தட்டித் தூக்கினார்.

இயக்குநர் அ. வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு படத்திலும் காதலி பாவனி உடன் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் தனியாக ஒரு வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

Bigg Boss Tamil fame Amir requested fans to help for two students education

துணிவு படத்திற்கு பிறகு புதிதாக ஒரு படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்து வருகிறார் அமீர். இந்நிலையில், இரு குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவி செய்ய வேண்டும் என உருக்கமான கோரிக்கையுடன் தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

பிக் பாஸ் அமீர் கோரிக்கை: கடந்த சில வருடங்களாக இரு மாணவர்களின் கல்வித் தொகையை வேறு ஒரு சோர்ஸ் மூலமாக கொடுத்து வந்ததாகவும் தற்போது அந்த சோர்ஸால் மாணவர்களின் கல்வி செலவை கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் தன்னாலும் அந்த அளவு பணத்தை கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் யாராவது அந்த மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ள முன் வந்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் அமீர்.

சின்னத்திரை சினிமா என அதிகமாக சம்பாதிக்கும் அமீரால் அந்த இரு மாணவர்களின் கல்விச் செலவை கூட செலுத்த முடியாதா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுப்பியுள்ளனர்.

நெட்டிசன்கள் கேள்வி: விஜய் டிவியின் கேபிஒய் பாலா தான் சம்பாதிக்கும் பணத்தில் ஏகப்பட்ட பேருக்கு உதவிகளை செய்து கொடுப்பதும் இல்லாமல் அவசர உதவிக்காக இரு ஆம்புலன்ஸ்களையும் தன் சொந்த காசு போட்டு வாங்கி கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் அமீர் ஏன் இப்படி இரு மாணவர்களின் கல்வி செலவுக்கான பணத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு கேட்கிறார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. தன்னிடம் அந்த அளவுக்கு பணம் இருந்தால் தானே அந்த மாணவர்களுக்கு கொடுத்திருப்பேன் என்பதையும் பிக் பாஸ் அமீர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X