ஷிவானியுடன் ஜோடியா நிப்பாருன்னு பார்த்தா ரெடின் கிங்ஸ்லி கூடவா.. பிக் பாஸ் பாலா பட ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆணழகன் போட்டிகளில் அசத்தி வந்த பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்றார்.

ரூல்ஸ்களை பிரேக் செய்வது நடிகர் ஆரி அர்ஜுனனுடன் மோதுவது, ஷிவானி உடன் டூயட் பாடுவது, வெள்ளிக்கிழமை ராமசாமி ஆக மாறுவது என பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரகளை செய்து வந்தவர் பாலாஜி முருகதாஸ். சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் பாலாஜி முருகதாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil fame Balaji Murugadoss debut movie first look out now

ஹீரோவான பிக் பாஸ் பாலா: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் முடிவுடன் களமிறங்கிய பாலாஜி முருகதாஸ் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் ஒன்றில் நடித்து வந்த நிலையில் தற்போது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் எல்ஜி ரவிச்சந்திரன் இயக்கத்தில் " வா வரலாம் வா" எனும் டைட்டிலில் உருவாகியுள்ள படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் பாலாஜி முருகதாஸ். ஆம்னி பஸ்ஸை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைந்திருக்கும் என்பது டைட்டில் மற்றும் பஸ்ட் லுக்கை பார்த்தாலே தெரிகிறது.

ரெடின் கிங்ஸ்லியுடன்: பிக் பாஸ் பாலா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹீரோயினுடன் செம ரொமான்டிக் போஸ் கொடுப்பார் என்று பார்த்த ரசிகர்களுக்கு ரெடின் கிங்ஸ்லீ உடன் முட்டிக்கொண்டு நிற்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் பாலா நடித்து விரைவில் வெளியாக உள்ள வா வரலாம் வா படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். பாலாஜி முருகதாஸை ஹீரோவாக பார்த்த ரசிகர்கள் கூடிய சீக்கிரமே சில்வர் ஸ்கிரீனில் ஜொலிக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Bigg Boss Tamil fame Balaji Murugadoss debut movie first look out now

வா வரலாம் வா: பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை ஷிவானி நாராயணன் சுமார் ஐந்து படங்கள் நடித்த நிலையில், அவரது நெருங்கிய தோழரான பாலாஜி முருகதாஸ் தற்போது தான் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், அதன் துவக்க விழா நிகழ்ச்சிக்கு ஓவியா வருவதாக கூறியுள்ளார். பாலாஜி முருகதாஸும் அந்த நிகழ்ச்சிக்கு வந்து தனது படத்தை புரமோஷன் செய்தால் சிறப்பாக இருக்கும் என பிக் பாஸ் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X