நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சாக்‌ஷி அகர்வால் இந்த நிவர் புயல் நேரத்தில் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

Recommended Video

V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL

மழையில் நனைந்து நடிகைகள் ஆடினாலே அது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து தான்.

ஆனால், இது போன்ற புயல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் பாதுகாப்பாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்களின் அக்கறை பாராட்டுக்குரியது.

நிவர் புயல்

நிவர் புயல்

சென்னையை படாத பாடு படுத்தி வரும் நிவர் புயலில் சிக்காமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தேவை ஏற்பட்டால் அவசர எண்களை தொடர்பு கொள்ளவும் ஏகப்பட்ட புயல் எச்சரிக்கை அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.

மழையில் நனைவது

மழையில் நனைவது

மழையில் நனைவது, அடடா மழைடா என தமன்னா போல பாட்டுப் பாடிக் கொண்டு ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம் தான். மழை நேரங்களில் சுட சுட டீ, பஜ்ஜி போன்றவற்றை சாப்பிடுவதும் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று, ஆனால், தாழ்வான பகுதிகளிலும், கடற்கரை பகுதிகளில் வாழும் மீனவர்களுக்கு இது போன்ற புயல் காலங்கள் சோகத்தை மட்டுமே பரிசாய் தரும் என்பது வேதனையான ஒன்று.

மழையில் நடனமாடும் சாக்‌ஷி

மழையில் நடனமாடும் சாக்‌ஷி

நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சாக்‌ஷி அகர்வால், சென்னையை வெளுத்து வாங்கி வரும் நிவர் புயல் காரணமாக கொட்டித் தீர்க்கும் மழையில் மொட்ட மாடியில் நின்று கொண்டு நடனமாடும் புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். முரட்டுத் தனமாக உடற்பயிற்சி செய்யும் சாக்‌ஷியின் இன்ஸ்டா புகைப்படங்கள் எல்லாமே வேற லெவலில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

காயங்களை கழுவட்டும்

காயங்களை கழுவட்டும்

நீல நிறத்தில், வெள்ளை நிற பூக்கள் டிசைன் போட்ட சேலையை அணிந்து கொண்டு தனது மொட்டை மாடியில் நன்றாக நனைந்து விளையாடும் சாக்‌ஷி அகர்வால், அதற்கு கேப்ஷனாக " Let the rain wash away all your pain" என இந்த மழை நம்முடைய காயங்களை எல்லாம் கழுவி செல்லட்டும் என பதிவிட்டுள்ளார்.

எச்சரிக்கும் ரசிகர்கள்

எச்சரிக்கும் ரசிகர்கள்

#Nivar புயல் காரணமாக இந்த போட்டோவுக்கு உங்களை எச்சரிக்க நினைத்தேன். மழை நேரத்தில் வீட்டுக்குள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருங்கள் என சொல்ல வந்தேன், ஆனால், நீங்களே ஒரு புயல் என்பதால், என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துப் போனேன் என சாக்‌ஷிக்கு எச்சரிக்கை விடுத்தும், வழிந்தும் கமெண்ட் செய்துள்ளார் இந்த ரசிகர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X