கேரளா புடவையில் கும்முனு இருக்கும் ஷிவானி… ஆஹா ஓஹோ என வர்ணிக்கும் ரசிகர்கள் !
சென்னை : கேரளா சேலையில் செதுக்கிவைத்த சிலைபோல சிக்குனு இருக்கிறார் ஷிவானி.
இந்த ஓ மணபெண்ணே கெட்டப் வீடியோவை ஷிவானியின் நலம் விரும்பிகள் ஆஹா ஓஹோ என வர்ணித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

சீரியலில்
சின்னத்திரையில் சீரியல் மூலம் பிரபலமானவர் ஷிவானி. விஜய் டிவியில் இவர் நடித்த பகல் நிலவு நல்ல வரவேற்பை பெற்றத்தைத் தொடர்ந்து தனது ரசிகர் வட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள இன்ஸ்டாகிராமில் தினமும் அதிரிபுதிரி செய்து படத்தை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

விதவிதமான பிக்ஸ்
கவர்ச்சிக்கே தண்ணிக்காட்டும் அளவுக்கு இருக்கும் இவரின் புகைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் இணையத்தில் இவரை பின்தொடர்ந்து இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு தவறாமல் லைக் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முன்னணி நடிகைகளே மிரண்டு போகும் அளவுக்கு தினமும் வித விதமான புகைப்படம், வீடியோ என இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.

கோட்டைவிட்டார்
தாறுமாறாக எகிறிய புகழால் பிக் பாஸ் சீசன்4ல் கலந்து கொண்ட இவர், சமத்து பெண்ணாக நடந்து கொண்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். நிச்சயம் இவர் தான் வெற்றி பெருவார் என அவரது நலம் விரும்பிகள் நினைத்த நிலையில் பாலாஜிக்கு பணிவிடை செய்து கொண்டு அவர் பின்னால் சுற்றியதால் அந்த வாய்ப்பை கோட்டைவிட்டார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் தனது கவர்ச்சி புகைப்படம், வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்திலிருந்து அழித்தார். இதனால் இனிமேல் கவர்ச்சி போட்டோ வராதா? என்ன ஆச்சு ஷிவானிக்கு என்று ரசிகர்கள் குழப்பமான நிலையில், நித்தம் நித்தம் ஒரு தினுசான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

ஓ மணபெண்ணே
வழக்கமாக மாடர்ன் உடையில் வரும் ஷிவானி அண்மைக்காலமாக தாவணி அல்லது புடவையில் இடுப்பு தெரிய புகைப்படத்தை அப்லோடு செய்கிறார். தற்போது கேரள சேலையில் ஓ மணே பெண்ணாக மாறி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திலேய பல லைக்குகளை பெற்று டிரெண்டிங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











