விஜே பார்வதி மீது வருத்தம் இருக்கலாம்.. விஜய் சேதுபதி பளீச்.. பிக்பாஸில் நடந்தது இன்னும் மறக்கல

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கடந்த வருடத்தில் நடைபெற்றது. அதில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராகவும், சபரி இரண்டாவது இடத்தையும் பிடித்தார்கள். ஆனாலும் கலந்துகொண்டவர்களிலேயே சென்சேஷனல் ஆனவர்கள் என்றால் அவர்கள் விஜே பார்வதியும், கம்ருதீனும்தான். இரண்டு பேருமே சக போட்டியாளர் சாண்ட்ராவை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பி; அவர்களுக்கு ரெட் கார்டினை வாங்கி கொடுத்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி விஜே பார்வதி பற்றி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகபோக வரவேற்பு இருக்கிறது. ஒன்பதாவது சீசன் கடந்த வருடத்தில் தொடங்கியது. மொத்தம் 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் அதில் பங்கேற்றார்கள். ஒவ்வொருவருமே எப்படியாவது டைட்டிலை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் விளையாட; விளையாட்டில் சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை. ஆனாலும் வெல்ல வேண்டும் என்கிற தன் முனைப்பு பல நேரங்களில் போட்டியாளர்களை எல்லைகளை மீற வைத்துவிட்டது. அப்படி மீறியவர்களில் விஜே பார்வதியும், கம்ருதீனும் முதன்மையானவர்கள்.

Bigg Boss Tamil Fame VJ Parvathy Wins Praise from Vijay Sethupathi Despite Controversy
Photo Credit:

சாண்ட்ராவுடன் பிரச்னை: டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது காரில் அமர்ந்திருந்த சாண்ட்ராவை பாருவும், கம்முவும் எட்டி உதைத்து கீழே தள்ளினார்கள். அப்போது சாண்ட்ராவுக்கு பேனிக் அட்டாக் வர; மருத்துவர்களால் நிலைமையும், அவரது உடல்நிலையும் சீரடைந்தன. இருவரும் அப்படி செய்ததை பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். திவ்யா கணேஷ் எல்லாம் பார்வதியை கிழித்து தொங்கவிட்டார். அவர்களுக்கு உடனடியாக ரெட் கார்டு தர வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வந்தன.

ரெட் கார்டு; நோ ஃபீலிங்ஸ்: தொடர்ந்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட கையோடு சாண்ட்ராவின் கால்களில் விழுந்தார் கம்ருதீன். ஆனால் விஜே பார்வதியோ ஃபீலிங்ஸ் எதையும் வெளியே காண்பிக்காமல் வெளியே சென்றுவிட்டார். அதற்கு பிறகு போட்டியில் திவ்யா கணேஷ் வென்றுவிட்டார். அந்த பிக்பாஸ் முடிந்தாலும் பாருவும், கம்ருதீனும் தொடர்ந்து பழகிவருகிறார்கள். இந்நிலையில் பார்வதி இப்போது விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிற முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.

Also Read
கேம்பா விளம்பரத்தில் மிரட்டிவிட்ட அஜித்.. தியேட்டரில் போடுவாங்களானு ஏங்கும் ரசிகர்கள்
கேம்பா விளம்பரத்தில் மிரட்டிவிட்ட அஜித்.. தியேட்டரில் போடுவாங்களானு ஏங்கும் ரசிகர்கள்

விஜய் சேதுபதி பேச்சு: நேற்று அந்த வெப் சீரிஸ் திரையிடல் நடைபெற்றது. அதை முடித்த பிறகு பேசிய சேது, "சிம்பு, சூர்யா என அனுபவசாலிகள் இருக்கும்போது என்னை பிக்பாஸ் தொகுத்து வழங்க வைத்தவர் ஜியோ ஹாட்ஸ்டார் பிரதீப். அவருக்கு நன்றி. விஜே பார்வதி பற்றி ஏதும் பேசுவதற்கு இல்லை. ஏனெனில் வாரா வாரம் பார்வதியிடம் நான் பேசி பேசி சலித்துவிட்டது. பார்வதி மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம்.

ஆனால் அவளை பிடிக்கும்: ஆனால் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் அவளை உங்களுக்கு பிடித்துவிடும். இதில் முத்துக்குமரன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரும் ஒரு திறமைசாலி. முத்துக்குமரனை இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டனிடம் அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியி நடந்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமாட்டார்கள் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X