இதெல்லாம் ஒரு பொழப்பா அபி? பாவனி டாய்லெட் போக நீங்க ஏன் சிபாரிசு பண்றீங்க.. கடுப்பான ரசிகர்கள்!
சென்னை: இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியையே தாங்கி நடத்துவது தான் என்றும் டாப் 5 கன்டெஸ்டன்ட் தான் என்றும் ஆல்ஃபா மேல் சிந்தனையில் விளையாடி வரும் அபிஷேக் ராஜாவை பிக் பாஸ் ரசிகர்கள் கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.
பிரியங்கா, இசைவாணி, பாவனி என பலரிடமும் அநியாயத்துக்கு ஒட்டிப் பழகி இன்ஃப்ளூயன்ஸ் செய்யும் அபிஷேக் ராஜாவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.
உச்சகட்டமாக வருணிடம் வந்து பாவனி டாய்லெட் போக சிபாரிசு செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர். எடிட்டர் அதை வெட்டியே இருக்கலாம்.

அருவருப்பின் உச்சம்
இதுவரை இருந்த பிக் பாஸ் போட்டியாளர்களிலேயே இப்படியொரு டிசைனை இதுவரை பார்க்க வில்லை என அபிஷேக் ராஜாவை அருவருப்பின் உச்சமாகவே பிக் பாஸ் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கி விட்டனர். அபிஷேக் பேசும் போது மட்டும் எடிட்டர் மியூட் போட்டு ஷோ நடத்தலாமே என்றும் கேட்டு வருகின்றனர்.

அத்துமீறும் அபிஷேக்
பிரியங்காவிடம் ஒட்டி உரசி பழகினால் தான் கேமராவில் தெரிவேன் என சொன்ன அபிஷேக் எப்போதும் அவரை உரசியபடியே அமர்ந்திருப்பது ரசிகர்களை கடுப்பாகி வருகிறது. மேலும், மற்றவர்களை கேம் விளையாட விடாமல் அனைத்திலும் மூக்கை நுழைத்து அக்கப் போர் செய்து எல்லை மீறுகிறார் அபிஷேக் போன்ற குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

மூடிக்கிட்டு போ
கிச்சன் ஏரியாவில் நெருப்பு காயினை வைத்திருந்த இசையிடம் இருந்து அபிஷேக் அதை நைசாக பேசி ஆட்டையை போடலாம் என நினைத்த நிலையில், இசைக்கு ஆதரவாக சுருதி போட்ட சண்டையின் காரணமாக அபி கடைசியில் பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம் என்பது போல இசையிடமே அதை கொடுத்து விட்டார். அதன் பிறகும் சுருதியிடம் இன்ஃப்ளூயன்ஸ் பண்ண வந்த அபிஷேக் ராஜாவை மூடிக்கிட்டு போ என்றே சுருதி திட்டி ஆஃப் செய்து விட்டார்.

பாவனி டாய்லெட் போக
இதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால், பாத்ரூம் ஏரியாவை நீர் டோக்கனுடன் ஆட்சி செய்து வந்த வருணிடம் சென்று பாவனி டாய்லெட் போக மட்டும் பர்மிஷன் கொடு என அபிஷேக் ராஜா அசிங்கமாக சிபாரிசு செய்ததை வெளுத்து வாங்கி வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். இந்த வாரமே அபிஷேக்கை வெளியே அனுப்புங்க இல்லைன்னா இந்த ஷோ இன்னும் நாரிடும் என கமல் சாருக்கே டேக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











