ஏதோ ஒரு முடிவோட தான் மொட்டை வந்துருக்கு.. புரமோ வீடியோவை பார்த்து பொங்கும் பிக் பாஸ் ரசிகர்கள்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் புரமோக்களை பார்த்த ரசிகர்கள், அதனை ட்ரோல் செய்யும் விதமாக ஏகப்பட்ட ரியாக்ஷன்களை, அந்த புரமோ வீடியோவுக்கு கீழே கொடுத்துள்ளனர்.
கலகலப்பாக உள்ள அந்த கமெண்ட் பக்கத்தில் இருந்து சில டக்கரான காமெடி ட்வீட்களை எடுத்து தொகுத்துள்ளோம்.
இந்த வாட்டியும் மத்தவங்களை ஓவர் டேக் பண்ணிட்டு, சுரேஷ் சக்கரவர்த்தி தான் நல்லா ஸ்கோர் பண்ணிருக்காரு.

இவருக்கு பதில் இவர்
கடந்த பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிக் பாஸ் ரசிகர்களையே அலற வைத்த வத்திக்குச்சி வனிதாவுக்கு பதில், இந்த சீசனில் அனிதா சம்பத் ஆட்டம் காட்டுகிறார் என்று ஏகப்பட்ட ரசிகர்கள் தொடர்ந்து அவரை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், பலர் இவர் அனிதா இல்லை ஜூலி என்றும் கலாய்த்துத் தள்ளுகின்றனர்.

குழந்தை சேஃப்
அடுத்த ஷிஃப்ட் ஃபைட் பண்றதுக்கு சனம் ஷெட்டியும், பாலாஜி முருகதாஸையும் பிக் பாஸ் இறக்கிட்டாரு, எப்படியோ என்னை ஆள விட்டா சரி தான் என மொட்டை தலை சுரேஷ் சக்கரவர்த்தி நடையை கட்டுவது போன்ற மீமை போட்டு, குழந்தை சேஃப் என கேப்ஷனும் போட்டு இந்த நெட்டிசன் வேற லெவலில் வச்சு செய்துள்ளார்.

ஊசி ஏத்துற மாதிரி
"ரேகா மேடம் மேக்கப் போட்டு போட்டு எல்லாத்தையும் அடக்கி வச்சி வச்சிடுறாங்க, சுரேஷ் எப்படின்னா இந்த வாழைப் பழத்தில் ஊசி ஏத்துற மாதிரி கலாய்ச்சு விட்டுறுறான்" என ஒரு வயசானவர் என கூட பார்க்காமல் நம்ம சுரேஷ் தாத்தாவை வெளுத்து வாங்கி உள்ளார் இந்த நெட்டிசன்.

அத்துப்படி போல
பிக் பாஸ் நிகழ்ச்சியில எப்படி எல்லாம் ஆக்டிங் கொடுக்கணும்னு நம்ம மொட்ட பாசுக்கு அத்துப்படி போல என வடிவேலுவின் காமெடி புகைப்படத்தை போட்டு இந்த நெட்டிசன் நல்லா வாரி விட்டுள்ளார். பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி சண்டை ஆரம்பிச்சாலும், மொட்டை மாமாவை ரசிகர்கள் மறக்க மாட்டேங்கிறாங்க

மொட்டை அடிச்சுருவாரு
மொட்டை எல்லாத்தையும் மொட்டை அடிச்சுருவாரு போல என சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டில் படுத்துக் கொண்டு சகுனி மாமா போல திட்டம் தீட்டும் போட்டோவை போட்டு இந்த நெட்டிசன் உண்மையை உரக்கச் சொல்லி விட்டார். மத்த போட்டியாளர்கள் சரியில்லை என மட்டம் தட்டிக் கொண்டே மாஸ் காட்டுகிறார் சுரேஷ்.

இவங்க தான் ஃபேவரைட்
முன்னாள் மாடல் அழகி, இந்நாள் ஆன்ட்டி சம்யுக்தாவையும் ஜொள்ளு விடும் ஒரு கூட்டமும் சமூக வலைதளத்தில் சுற்றி இருக்கத்தான் செய்கிறது. நடிகர் ஆரி அர்ஜுனா மற்றும் மாடல் அழகி சம்யுக்தா இருவரும் அமர்ந்துள்ள போட்டோவை போட்டு, இவங்க தான் என்னோட ஃபேவரைட் என இந்த ரசிகர்கள் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

ரெண்டு பேருமே டுபாக்கூர்
நான் ரொம்ப வருஷமா மாடலிங் பண்றேன்னு சொல்லிக்கிட்டு சுத்துற சனம் ஷெட்டியும், அது ஒரு டுபாக்கூர் கம்பெனின்னு ஓப்பனா கலாய்ச்ச பாலாஜி முருகதாஸையும் இந்த மீம் க்ரீயேட்டர் அடித்து நொறுக்கி உள்ளார். நீங்க ரெண்டு பேருமே டுபாக்கூர் தான்மா என போட்டு ரசிகர்களின் அப்ளாஸ்களையும் அள்ளி உள்ளார்.

முடிவோட தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரமோவை விட, அதை பார்த்து நெட்டிசன்கள் கொடுக்கும் ரியாக்ஷன்கள் தான் உண்மையிலேயே செமயா இருக்கு, ஏதோ ஒரு முடிவோட தான் மொட்டை வந்துருக்கு என வடிவேலு காமெடி காட்சியை போட்டு இந்த ரசிகரும் நல்லா வச்சு செஞ்சிருக்காரு, இன்னைக்கு கமல் என்னத்த வச்சு செய்யப் போறாருன்னு பார்ப்போம். ஏதாவது செய்வாரா?


Click it and Unblock the Notifications











