ஒரே பந்துல ரெண்டு விக்கெட்.. பிரியங்காவுக்கும் அபிஷேக்குக்கும் இன்னைக்கு சரவெடி காத்திருக்கு!

சென்னை: பிரியங்காவை மூக்குடைப்பு செய்த கமல்ஹாசன் அதே நேரத்தில் அபிஷேக் ராஜாவையும் விளாசி தள்ளி இருக்காரே கவனிசீங்களான்னு நெட்டிசன்கள் 'விமர்சனம் பண்றவங்க' எனும் வார்த்தையை ஹைலைட் செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக பஞ்ச தந்திர டாஸ்க் கொடுத்து படுத்திருந்த பல போட்டியாளர்களை தட்டி எழுப்பினார் பிக் பாஸ்.

கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் தொடங்கி உள்ள 5வது சீசனை டிஆர்பி கிங்காக மாற்ற இன்றைய எபிசோடில் கமல் தடவிக் கொடுக்காமல் தட்டி கேட்டுள்ளார் என புரமோவை பார்த்து ஜாலி ஆகி உள்ளனர் ரசிகர்கள்.

மினி ஆர்த்ரோ

மினி ஆர்த்ரோ

உலகளவில் பிரபலமான மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரில் வரும் ஆர்த்ரோ கதாபாத்திரத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் வெறுத்தனர். அவன் சாக வேண்டும் என பலர் வேண்டிக் கொண்டனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டின் மினி ஆர்த்ரோ அபிஷேக் ராஜா தான் என கம்பேர் பண்ணி கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர்.

பேக் டு தி ஃபார்ம்

பேக் டு தி ஃபார்ம்

நீங்க நிருப் கையில எழுதினத நாங்க இங்க பார்த்தோம். விதிகள் அனைவருக்கும் பொதுவானது என கமல் சார் பிரியங்காவை வச்சு விளாச கமல் சார் பேக் டு தி ஃபார்ம் என பிக் பாஸ் ரசிகர்கள் ஆரம்ப கால பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த கமலை பார்த்து விட்டதாக கமெண்ட்டுகளை தெறிக்க விடுகின்றனர்.

திமிரை அடக்கணும்

திமிரை அடக்கணும்

"அந்த திமிரை கொஞ்சம் அடக்கணும்.. எல்லாரும் விஜய் tv யில் தன்னை வைத்து கொண்டாடினார்கள் என்ற தலைக்கனத்தில் அந்த பவர் ஐ வைத்து மற்றவர்களை ஒடுக்கலாம்னா அதுக்கு bigboss வரக்கூடாதுமா... இது மக்கள் முடிவு உங்க சேனல் இஷ்டத்துக்கு எது வேணும்னாலும் பண்ணிட்டு போக முடியாது." என இந்த நெட்டிசன் விளாசி உள்ளார்.

ஒரே பந்துல ரெண்டு விக்கெட்

ஒரே பந்துல ரெண்டு விக்கெட்

"பிரியங்கா தாக்கப்பட்டார்.. ஒரே பந்துல ரெண்டு விக்கெட். பிரியங்கா மற்றும் அபிஷேக் ராஜா.. மத்தவங்கள விமர்சனம் பண்ணுறதுக்கு முன்னாடி நாம ஒழுக்கமா இருக்கணும்.. நான் சொல்லல #KamalHaasan அவரு சொல்லுறாரு" என கமெண்ட் போட்டு விமர்சகர் அபிஷேக் ராஜாவையும் கமல் விளாசி இருந்ததை நோட் பண்ணி கலாய்த்து வருகின்றனர். தனியாவும் அபிஷேக் ராஜாவுக்கு இன்னைக்கு செம டோஸ் இருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X