பார்… முழு சைக்கோவாக மாறிய பிரியங்காவை பார்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : இன்றைய எபிசோடின் 3வது ப்ரமோவில் Worst performer ஆக நிரூப் மற்றும் பாவனி தேர்வு செய்யப்பட்டு பாதாள சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
வீட்டில் உள்ள அனைவருமே நிரூப் சரியான ஈடுபாடுடன் விளையாடவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
3வது ப்ரோமோவிலும் நிரூப், பிரியங்கா இடையே சண்டை சச்சரவு நடக்கிறது இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் இதிலும் பிரியங்காதான், ஏன் மற்ற போட்டியாளர்கள் யாருமே வீட்டில் இல்லையா என கேட்டுவருகின்றனர்.

கோவப்பட்ட நிரூப்
பிக் பாஸ் வீட்டில் இன்றைய எபிசோடுக்கான வெளியான புரமோவில், நிரூப், டாஸ்க் ஃபுல்லாவே சும்மா இஷ்டத்துக்கு கலாய்த்தீர்கள், நான் வேண்டாம் என்று கூறியும் விடாமல் இப்படிதான் கலாய்ப்பேன் என்று கூறி கலாய்த்தீர்கள், எதற்கு கலாய்த்தீர்கள் என்று பிரியங்காவிடம் ஆக்ரோஷமாக கத்தினார். தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில் பிரேக்கிங் நியூஸ் டாஸ்கில் Worst performer ஆக நிரூப் மற்றும் பாவனி தேர்வு செய்யப்பட்டு பாதாளசிறையில் அடைக்கப்படுகின்றனர்.

நிம்மதியா இருப்பான்
3வது ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், நிரூப்...பிரியங்கா, அபிஷேக் கூட இருந்து அவமானம் படுறதுக்கு பேசாம வெளியவே வந்தரலாம். வெளியாவச்சும் நிம்மதியா இருப்பான் என பதிவிட்டுள்ளார்.

ஓவர் ஆக்டிங்
பிரியங்காவின் செய்கையால் கடுப்பான ஒரு நெட்டிசன்ஸ், பிரியங்கா சந்திரமுகி படத்தில் வர ஜோதிகா மாதிரி ஓவரா ஆக்டிங் பண்ணாங்க. என பதிவிட்டுள்ளார்.

முழு சைக்கோ
மற்றொரு நெட்டிசன்ஸ், முழு சைக்கோவாக மாறிய பிரியங்காவை பாருங்க. பலமான ஆளை தனக்கு துணையாக வைத்துக்கொள்ள பாசம் என்ற நாடகத்தை அரங்கேற்றியதன் விளைவு தான் இது. என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

நன்றி பிக் பாஸ்
மேலும் ஒரு இணையவாசி, நன்றி பிக்பாஸ், பிரியங்காவோட உண்மையான கேரக்டர் காட்டுனதுக்கு. இல்லனா இன்னும் 10 வருஷம் ஆனாலும் சூப்பர் சிங்கரை பார்த்து ஏமாந்து இருப்போம். என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











