வேறு பெண்ணுடன் உறவில் இருந்தார்.. விவாகரத்தும் தரல.. கணவரை நினைத்து கலங்கும் பிக்பாஸ் சம்யுக்தா!

சென்னை: வேறு பெண்ணுடன் உறவில் இருந்தது தெரிந்து மன வேதனை அடைந்ததாக பிக்பாஸ் சம்யுக்தா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மாடலிங் துறையில் அதீத ஆர்வம் கொணடவரான சம்யுக்தா, 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

Bigg Boss Tamil Samyuktha opens up about her separation from her husband

இவர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ரயான் என்கிற மகனும் இருக்கிறார்.

சம்யுக்தா பேட்டி: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சம்யுக்தா, கணவரை பிரிந்தது குறித்து மனம் திறந்து பேசினார். அதில், என் கணவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். நான் இங்கு இருந்தேன். அப்போது தான் அவர் நான்கு ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்தார். அவர் என்னிடம் சரியாக பேசமாட்டார். அதற்கான காரணம் எனக்கு நான்கு ஆண்டுகள் கழித்து தான் தெரியவந்தது.

Bigg Boss Tamil Samyuktha opens up about her separation from her husband

மறக்கமுடியாத வலி: இந்த சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகள் ஆனபோதும், இந்த வலியை என்னால மறக்க முடியவில்லை. அவர் வேண்டும் என்பதற்காக நான் நிறைய விஷயம் செய்துவிட்டேன். முறைப்படி விவாகரத்து கொடுக்கக்கூட அவர் இந்தியா வரவில்லை. என் குழந்தை ரயான் என்ன செய்தான், அவன் அப்பா வேணும்னு கேட்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. வாழ்க்கையில் நல்ல வாழ்க்கை துணை அமைவது ரொம்ப முக்கியம் அது என் வாழ்க்கையில் நடக்கவில்லை என்றார்.

என் வாழ்க்கையின் ஏஞ்சல்: இந்த மனவேதனையில் இருக்கும் போதுதான் ஏஞ்சல் மாதிரி என் வாழ்க்கையில் வந்தாங்க பாவனா. என்னுடைய அப்பார்ட்மெண்ட் அருகில் தான் பாவனாவின் மாமனார் மாமியார் இருக்கிறார்கள். அவ்வப்போது பார்க்கும் போது ஹாய், பாய்னு சொல்லிப்போம். ஒருமுறை வாக்கிங் போகலாம்னு கூப்பிட்டார் பாவனா.அப்போது தான் என் குடும்பம் பற்றியும் கணவர் பற்றியும் கேட்டார். அப்போ நான் நடந்ததை கூறி அழுதேன்.

Bigg Boss Tamil Samyuktha opens up about her separation from her husband

அதன்பிறகு தான் பாவனாவோடு நெருங்கி பழக ஆரம்பித்தேன். லாக்டவுன் சமயத்தில் இருவரும் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வோம். அப்படி தான் எங்கள் நட்பு வளர்ந்தது. அதன்பின்னர் அவர் தான் என்னை பிக்பாஸுக்கு பரிந்துரை செய்தார். அவரால் தான் என் வாழ்க்கையே மாறியது. இப்போ சம்யுக்தா யாருன்னு உலகத்துக்கு தெரிகிறது என்றார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X