“அவங்க என்னை கூப்பிடவும் இல்ல.. நான் கலந்துக்கவும் இல்ல”.. பிக் பாஸ் 3 பற்றி பிரபல நடிகை விளக்கம்!

பிக் பாஸ் 3ல் நான் கலந்து கொள்ளவில்லை... தீயாய் பரவிய வதந்திக்கு பிரபல நடிகை விளக்கம்

By Staff

சென்னை: தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் நடிகை சாந்தினி.

தமிழில் சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. அப்படத்தைத் தொடர்ந்து படத்தைத் தொடர்ந்து நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, நய்யப்புடை, கண்ணுல காச காட்டப்பா, என்னோடு விளையாடு, பாம்பு சட்டை என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.

bigg boss tamil season 3 chandini denies participation

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த ஒன்பது படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. முதலில் இது தொடர்பாக சாந்தினி அளித்த பேட்டியொன்றில், 'பிக் பாஸ் குழு தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தான் இன்னும் அது தொடர்பாக முடிவெடுக்கவில்லை’ என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது சாந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. கை நிறைய படங்கள் இருந்தும் சாந்தினி ஏன் இப்படி விபரீத முயற்சி எடுக்கிறார் என்றும் ரசிகர்கள் அக்கறையுடன் கவலை தெரிவித்திருந்தனர்.

ஆனால், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று சாந்தினி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தன்னை அழைக்கவும் இல்லை, தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதுமில்லை என அவர் கூறியுள்ளார்.வரும் 23ம் தேதி பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X