பிக்பாஸ்க்கு போன முதல் நாளே இப்படியா.. தர்ஷனின் முன்னாள் காதலியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ் .. !
சென்னை : தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 கோலாகலமாக தொடங்கி உள்ளது.
சிலரால் எதிர்பார்க்கப்பட்ட பலரால் எதிர்பார்க்கப்படாத பல பிரபலங்கள் அதிரடியாக சீசன் 4ல் இறங்கியுள்ள நிலையில் போன சீசனில் பலரது ஃபேவரிட் போட்டியாளராக இருந்தா தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டியும் இதில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் முதலில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ரியோ வை தொடர்ந்து நுழைந்த சனம் ஷெட்டியை முதல் நாளே இப்படியா, இது கண்டிப்பா அந்த போட்டியாளர் மாறி பெயர் வாங்கிட்டு தான் போகப் போகிறார் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

பல மாதங்களாக
கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக பல்வேறு படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் என பலவும் படப்பிடிப்பு தொடங்க முடியாமல் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தகுந்த பாதுகாப்புடன் முன்பைவிட பிரம்மாண்டமான முறையில் தொடங்கப்பட்டுள்ளது.

பலர் எதிர்பார்க்காத
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 4ல் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என பலரும் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இப்பொழுது சிலர் எதிர்பார்த்தது போலவும் பலர் எதிர்பார்க்காததை போலவும் பல்வேறு பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

ரியோ ராஜ்
வழக்கம்போல நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக நடிகரும் தொகுப்பாளருமான ரியோ ராஜ் செம மாஸாக என்ட்ரி கொடுத்தார்.

சனம் ஷெட்டி
நடிகர் ரியோவைத் தொடர்ந்து இரண்டாவது ஆளாக வீட்டுக்குள் அடி எடுத்து வைத்த போன சீசனின் பலரது ஃபேவரிட் போட்டியாளர் தர்ஷனின் முன்னாள் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி இப்பொழுது நெட்டிசன்களால் ஆரம்பமே இப்படியா என கலைக்கப்பட்டு வருகிறார்.

காயத்ரி ரகுராம்
பிக் பாஸ் சீசன் 1ல் காயத்ரி ரகுராம் எப்படி மற்ற போட்டியாளர்களை கிரீடத்துடன் வரவேற்றாரோ அதே பாணியில் சனம் செட்டி இதர போட்டியாளர்களை கிரீடம் அணிவித்து வரவேற்றதைப் பார்த்த பார்வையாளர்கள் இது அது இல்ல என்றவாறு கலாய்த்து வருகின்றனர்.

ஆரம்பமே இப்படியா
அதுமட்டுமல்லாமல் மற்ற போட்டியாளர்களை போல சகஜமாக இல்லாமல் என்னுடைய உடைமைகளை யாரும் தொடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கண்டிஷன்களை ஆரம்பத்திலேயே போட்டிருக்கும் சனம் ஷெட்டியை பார்த்து பலரும் பிக் பாஸுக்கு போன முதல் நாளே இப்படியா என சனம் செட்டியின் செயலை பார்த்து பலரும் முகத்தை சுளித்தவாறு ஆரம்பமே இப்படியா கேட்டு வருவதோடு நெட்டிசன்களால் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











