நெய் விளம்பரத்துல நடிச்ச பையனாடா நீ.. பிக் பாஸ் போட்டியாளரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலம் நெய் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளதை அலசி ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்ததை போல பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அமர்களமாக தொடங்கியது.

ரசிகர்கள் எல்லாம் விர்ச்சுவலாக இருக்க கமல்ஹாசன் தனது நியூ நார்மலை புரிந்து கொண்டு ஷோவை சிறப்பாக நடத்தினார்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன்

இந்த முறை எல்லா போட்டியாளர்களும் ஆட்டத்துடன் வரவில்லை. ஆனால், ரியோ ராஜ், ஷிவானி, ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, வேல் முருகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அட்டகாசமாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் என்ட்ரி கொடுத்து அசத்தினர். ஒருவர் பின் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்கு காலடி எடுத்து வைத்தனர்.

10வது போட்டியாளர்

10வது போட்டியாளர்

பிக் பாஸ் வீட்டுக்குள் பத்தாவது போட்டியாளராக சோமசேகர் உள்ளே அசத்தல் என்ட்ரி கொடுத்தார். உலக நாயகன் கமல்ஹாசனிடம் மிகவும் பணிவுடன் பேசிய அவர், எங்கே சென்றாலும், சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று புலம்பினார். பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கான அங்கீகாரத்தை கொடுக்கும் என்றே நம்பிக்கையுடன் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார்.

சண்டை போடுவாரோ

சண்டை போடுவாரோ

MMA என அழைக்கப்படும் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் ஜாம்பவனான இவர், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிலையில், இவரிடம் மொட்டை சுரேஷ் சக்கரவர்த்தி எல்லாம் வாய் துடுக்காக பேசினால், புரமோவில் பாக்ஸிங் செய்வது போல காட்டிய நிலையில், மூஞ்சில் ஓங்கி ஒரே குத்து குத்திவிடுவாரா? என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

விஜய் டிவி லிங்க்

விஜய் டிவி லிங்க்

இந்த சீசனில் கலந்து கொண்ட பெரும்பாலான போட்டியாளர்கள் விஜய் டிவியின் செல்லப் பிள்ளைகள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சோம சேகருக்கும் விஜய் டிவி உடனான தொடர்பு உள்ளது. 2010ம் ஆண்டு விஜய் டிவி நடத்திய அழகிய தமிழ் மகன் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தங்க மெடல்

தங்க மெடல்

தமிழ்நாடு மாநில அளவிலான பாக்ஸிங் போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கி வரும் இவர், 66 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்க மெடல் ஜெயித்துள்ளார். மற்றொரு போட்டியில் வெள்ளி மெடலையும் வென்றுள்ள இவர், ஏகப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ளார்.

நெய் விளம்பரம்

நெய் விளம்பரம்

குத்துச்சண்டை எல்லாம் போடுறாரே முரட்டு பீஸா இருப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், நெய் விளம்பரம் ஒன்றில் இவரை அடையாளம் கண்டு கொண்ட பிக் பாஸ் ரசிகர்கள் அந்த விளம்பரத்துக்கு கீழே இவர் குறித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர். உதய கிருஷ்ணா நெய் விளம்பரத்தில் ஆடி பாடி நடித்துள்ள இவர், சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

திருமணம் ஆகவில்லை

திருமணம் ஆகவில்லை

1990ம் ஆண்டு பிறந்த சோம சேகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 30 வயதாகும் இவர், இந்த பிக் பாஸ் வீட்டில் யாருடன் காதலில் விழப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவருக்கும் மற்றொரு பாடி பில்டரான பாலாஜி முருகதாஸுக்கும் மோதல்கள் நடக்குமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X