For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இருக்கு.. இன்னைக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கு.. வெளியான மூன்று புரமோக்கள்.. தெறிக்கும் மீம்கள்!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 3 புரோமோக்களும் வெளியாகி உள்ள நிலையில், மீம் க்ரியேட்டர்களுக்கு அய்யா சாமி வேலை வந்துடுச்சு என வச்சு செய்து மீம்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

  Anitha Sampath ஐ கடும்பாக்கிய Suresh • சூடு பிடிக்கும் பிக் பாஸ் வீடு

  பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களையும் பார்க்காத ரசிகர்களையும் பிக் பாஸ் மீம்கள் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் சும்மா விட்டு விடுவதில்லை.

  ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு சர்ச்சையையும் மீம்களாக போட்டு புரியாதவர்களுக்கும் என்ன நடக்கிறது என புரியவைத்து விடுகிறார்கள்.

  நேத்து ஷிவானி.. இன்னைக்கு அனிதா சம்பத்.. வனிதாவை மிஞ்சிடுவாரு போல சுரேஷ்.. பீதியை கிளப்பும் புரமோ!

  பாரி வள்ளலான ஆரி

  பாரி வள்ளலான ஆரி

  பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அறிமுகம் ஆன பிறகு, இரவு பிக் பாஸ் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இன்னுமொரு பெட்ரூம் திறக்கப்படாத நிலையில், வெளியில் ஆண் போட்டியாளர்கள் படுத்து உறங்கினர். குளிரில் நடுங்கிய ஆஜித்துக்கு நடிகர் ஆரி போர்வை போர்த்தி விட்ட நிலையில், முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, பெட்ஷீட் கொடுத்தான் ஆரி என அந்த சீனையே மீம் போட்டு அசத்தி விட்டனர்.

  ஷிவானி பாவம் டா

  ஷிவானி பாவம் டா

  முதல் நாளிலேயே பிரேக்கப் ஹார்ட்டீன்களாக ஷிவானிக்கு பலரும் குத்தி, அவரது இன்ஸ்டாகிராமில் உள்ள 2 மில்லியன் ரசிகர்கள் ஹார்ட்களையும் பிரேக் பண்ணி விட்டனர். டேய் டேய் ஷிவானி செல்லத்த விட்ருங்க டா பாவம் டா அவ என முத்துப்பாண்டி பிரகாஷ், கில்லி விஜய்யிடம் கெஞ்சும் மீமை போட்டு ஷிவானியை சேஃப் செய்ய முயல்கின்றனர்.

  பச்சை ரத்தம் ஒழுகும் போதும்

  பச்சை ரத்தம் ஒழுகும் போதும்

  "பச்சை ரத்தம் ஒழுகும் போதும், பச்சை குழந்தை சிரிப்பு பாரு, பீஸு பீஸா கிழிக்கும் போதும், ஏசு போல பொறுமை பாரு" என சின்ன புள்ள ஷிவானியை மற்றவர்கள் ஹர்ட் பண்ணும் போதும் அவர் யாரிடமும் சண்டைக்கு போகாமல் உள்ளுக்குள் கலங்கி நிற்கும் குணத்தை பார்த்து ஷிவானி ஆர்மியினர் அவருக்கு ஆதரவாக போஸ்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

  எல்லாம் மேக்கப்

  எல்லாம் மேக்கப்

  ஷிவானி பேசாம நீ இன்ஸ்டாகிராமுக்கே வந்துடு ஷிவானி என மீம் க்ரியேட்டர்கள் ட்ரோல் மீம்களை போட்டு தெறிக்கவிடுகின்றனர். இன்ஸ்டாகிராமில் செக்க சிவந்த சிலையாக இருந்த ஷிவானி, மேக்கப் இல்லாம, இப்போ இப்படி டல் அடிப்பதை பார்த்த பலரும், எல்லாம் மேக்கப் என பங்கம் செய்து வருகின்றனர்.

  சண்டை புரமோ

  சண்டை புரமோ

  என்னடா காலையில ஆறுதல் சொல்ற புரமோ, அடுத்து அழுகாச்சி புரமோ என போரடித்துப் போன ரசிகர்களுக்கு 3வது புரமோவாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சண்டை புரமோ வெளியாகி இருக்கிறது. ஆடுகளம் படத்தின் டெம்பிளேட்டை போட்டு, எப்பா களம் பிக்பாஸ்ல 3வது புரமோல, அனிதாவுக்கும் சுரேஷுக்கும் சண்டை நடக்குது என வெளியாகி உள்ள மீம் வெறித்தனமாக டிரெண்டாகிறது.

  அனிதா அழகி டா

  அனிதா அழகி டா

  சன் டிவியின் செய்திவாசிப்பாளராக இருந்த அனிதா, இப்போ பிக் பாஸ் தமிழ் சிசன் 4ன் அட்டகாச போட்டியாளராக அதிரடி காட்டி வருகிறார். இரண்டாவது புரமோவில் அம்மாவின் நிறம் குறித்து பேசி, கண் கலங்கி அழுத அனிதா, 3வது புரமோவில் மொட்டை சுரேஷிடம் மல்லுக்கு நிக்கிறார். ஆனால், அனிதாவின் ரசிகர்கள் மேக்கப் போடலைனாலும் அனிதா அழகி டா என அவரது அழகை ரசித்து வருகின்றனர்.

  இன்னைக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கு

  இன்னைக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கு

  முதல் நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவேற்பு, உற்சாகம், சந்தோஷம் என இருந்த நிலையில், முதல் நாள் பிக் பாஸ் வீட்டில், ஹார்ட் புரோக்கன் டாஸ்க் கொடுத்து சண்டையை ஆரம்பிச்சுட்டாங்க.. கலர் கலர் என்ன கலர் என்றும், எங்கம்மா போல இருக்காங்கன்னும் நிஷாவை பார்த்து கதறிய அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டைக்கு நின்றுள்ள நிலையில், நிச்சயம் இன்னைக்கு செம என்டர்டெயின்மென்ட் இருக்கு என பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil season 4, Day 2 promo memes goes viral in social media. Meme creators and trollers started their hilarious work for this season too.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X