நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. அப்போ எரும மாட்டுக்கு.. 2வது புரமோல வெடித்தது சண்டை.. சூடு பிடிக்குது!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் மூன்றாம் நாள் புரமோ 2 சண்டையுடன் செமயா வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
கடந்த ஞாயிற்றுக் கிழமை கமல்ஹாசன் 4வது முறையாக தொகுத்து வழங்க கோலாகலமாக பிக் பாஸ் சீசன் 4 ஆரம்பமானது.
வீட்டிற்குள் நுழைந்த உடனே போட்டியாளர்கள் மத்தியில் தொடர்ந்து சூப்பரான சண்டைகள் அரங்கேறி ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன.

ரசிகர்கள் விருப்பமும் அதுதான்
என்னதான் சென்ட்டிமென்ட், அழுகாச்சி சீன்களை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை நகர்த்தி சென்றாலும், அந்த ஷோவின் வெற்றியே அதில் வரும் சண்டை சீன்களும், சர்ச்சை காட்சிகளும் தான். வார்த்தை மோதலில் ஒவ்வொரு போட்டியாளர்களும் மோதிக் கொள்வது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே ரசிகர்களும் அதையேத் தான் விரும்புகின்றனர்.

எவிக்ஷன் லிஸ்ட்
இன்று வெளியான முதல் புரமோவில் அடுத்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் தேர்வான 4 பேர் யார் என்ற அறிவிப்பு வெளியானது. நடிகை ரேகா, சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் கேப்ரில்லா ஆகிய 4 பேரில் ஒருவர் அடுத்த வாரமே இந்த பிக் பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்லிவிட்டு கிளம்ப உள்ளார்.

விடாது கருப்பு
கிச்சனில் ஆரம்பித்த எச்சில் சண்டை இன்னமும் தொடர்கிறது. அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் மறுபடியும் முட்டிக் கொண்டது. இரண்டாவது புரமோவில் ரசிகர்கள் என்ஜாய் பண்ணும் அத்தனை ஐட்டங்களும் இன்று இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கப் போவதை இந்த புரமோ வெளிப்படுத்தி உள்ளது.

அப்போ எரும மாட்டுக்கு
அனிதா சம்பத்துக்கும், மொட்டை தலை சுரேஷ் சக்கரவர்த்திக்கும் மீண்டும் மோதல் வெடித்த நிலையில், சுரேஷ் சக்கரவர்த்தி விடும் அந்த வில்லன் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என அவர் சொல்லும் போது, அப்போ எரும மாட்டுக்கு என பாலாஜி முருகதாஸ் கலாய்க்க, காண்டேத்தும் படி சிரித்து விடுகிறார் அனிதா சம்பத்.

சமாதான புறா ரேகா
இந்த சீசனில் வனிதா விஜயகுமார் மாதிரி ரேகா சண்டை போடுவார் என்று பார்த்தால், அன்னை தெரசாவின் ஜெராக்ஸ் நான் என்பது போல நடந்து கொள்கிறார். சுரேஷ் சக்கரவர்த்தியிடம், சின்ன பொண்ணு சார் என சமாதானப்படுத்த முற்படுகிறார். ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தியோ, நான் தான் வில்லன் என்பது போல, விட்டுக் கொடுக்காமல் வாதாடுகிறார்.

அடல்ட்டுங்க
நம்ம வந்து 100 நாள் இருந்துட்டு போகணும் என ரேகா சமாதானம் செய்ய, எனக்கு மரியாதை தான் முக்கியம். என்னங்க சின்னப் பொண்ணு, பெரிய பொண்ணுன்னு அவ அடல்ட்ங்க, சும்மா இருங்க என ரேகாவையே ஆஃப் செய்து விடுகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. இவர்கள் சண்டை தான் இன்னைக்கும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு செம தீனியாக இருக்கப் போகிறது.


Click it and Unblock the Notifications











