முதல் புரமோவே செம அதிரடி.. அடுத்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்டில் இவங்க 4 பேர் தான்.. யார் வெளிய போவாங்க?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் மிரட்டலான அதிரடி புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

இந்த வாரம் Nominated Contestants இந்த 4 பேருல யாரு வெளியே போவாங்க? | Bigg Boss Tamil

மொக்கை புரமோ எதையும் விடாமல், நேரடியாக எலிமினேஷன் மேட்டருக்கே வந்த புரமோவை பார்த்த ரசிகர்கள், அடுத்த வாரம் இவங்க தான் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேறுவார் என இப்போதே கணிக்கத் தொடங்கி விட்டனர்.

இன்னும் 3 புரமோக்கள் எப்படி வரப் போகிறது, இன்னைக்கு என்ன சண்டை, ஆரி சொன்ன அந்த கதை என்ன என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

3ம் நாள் முதல் புரமோ

3ம் நாள் முதல் புரமோ

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 3ம் நாள் முதல் புரமோவை விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. சும்மா சாதாரண புரமோவாக இல்லாமல், அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு தேர்வான அந்த 4 பேர் யார் என்பதை முதல் புரமோவிலேயே போட்டு உடைத்து உள்ளனர்.

13 பேரின் கதை

13 பேரின் கதை

நேற்றைய நிகழ்ச்சியில் வேல்முருகன், சனம் ஷெட்டி மற்றும் அறந்தாங்கி நிஷா தங்களின் சொந்த கதைகளை கூறி போட்டியாளர்களை அழ வைத்தனர். அடுத்து உள்ள 13 பேரும் இன்று தங்கள் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை கூறுவார்கள் என தெரிகிறது. அடுத்ததாக, யார் யாரை எலிமினேஷனுக்கு அனுப்பலாம் என முடிவு செய்கின்றனர்.

பாலாஜி முருகதாஸ் பளிச்

பாலாஜி முருகதாஸ் பளிச்

தற்போது வெளியாகி உள்ள முதலாவது புரமோவில் பாலாஜி முருகதாஸ், 4 போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டின் இரண்டாம் வார எலிமினேஷனுக்கு நாமினேட் செய்கிறார். அதற்கான காரணங்களையும் பாலாஜி முருகதாஸ் ஒளிவு மறைவு இன்றி பளிச்சென கூறுவது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

யார் அந்த 4 பேர்

யார் அந்த 4 பேர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் முதல் வாரத்தில் எலிமினேஷன் ஏதும் கிடையாது என பிக் பாஸ் கூறினார். இரண்டாம் வாரத்திற்கான எலிமினேஷனில் தற்போது 4 பேர் இடம் பெற்றுள்ளனர். நடிகை ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா மற்றும் கேப்ரில்லா ஆகிய 4 பேரை பாலாஜி முருகதாஸ் எலிமினேட்டுக்கு பரிந்துரைத்த நிலையில், பிக் பாஸும் அவர்கள் பெயரையே கன்ஃபார்ம் செய்தார்.

சனம் ஷெட்டியை விட

சனம் ஷெட்டியை விட

மாடியில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிய வலி மிகுந்த கதையை சனம் ஷெட்டி கூறினார். ஆனாலும், நடிகர் ஆரி அர்ஜுனா சொன்ன கதை 10 பேருக்கு ரொம்ப இன்ஸ்பயரான ஒன்றாக உள்ளது. அதனால், நான் வேறு வழியில்லாமல் சனம் ஷெட்டியை எலிமினேட் செய்ய நாமினேட் செய்கிறேன் என பாலாஜி முருகதாஸ் கூறியதை கேட்ட பிக் பாஸ் ரசிகர்கள், சனம் ஷெட்டியை வெளியேற்ற வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

முதல் பலி ஆடு

முதல் பலி ஆடு

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் முதலாவதாக வெளியேற நடிகை ரேகா, சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் கேப்ரில்லா நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில், முதலாவதாக நடிகை ரேகா தான் வெளியேறுவார் என்று இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்களின் ஓட்டு யாரை காப்பாற்ற போகிறது, யாரை வெளியேற்றப் போகிறது என்பதை பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X