ஆஹா.. ரேகா ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்களே.. சனம், ரம்யா பாண்டியனிடமே செம மல்லுக்கட்டு.. இது புரமோ!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 5ம் நாள் முதல் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

யார் captain?தலையில் அடித்து கொண்ட Sanam Shetty | Promo 1

ஷிவானி, மொட்டை தல சுரேஷ், அனிதா சம்பத் சண்டை எல்லாம் இனிமே தொடர்ந்தா, நல்லா இருக்காதுன்னு, புதுப்புது ஐட்டங்களை இறக்கி உள்ளார் பிக் பாஸ்.

அன்னை தெரசாவின் மறு உருவமாக இதுவரை சீன் போட்டு வந்த நடிகை ரேகா, இப்பத்தான் ரோஜாக்கூட்டம் பட ரேகாவாக மாறி உள்ளார்.

ஆரம்பமே அசத்தல்

ஆரம்பமே அசத்தல்

அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி இடையே ஏற்பட்ட சண்டைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்து விட்டு, நடிகை ரேகாவுக்கும் மற்றவர்களுக்கும், நம்ம சகுனி மாமா பிக் பாஸ் சண்டையை மூட்டியுள்ள சூப்பரான முதல் புரமோ தற்போது வெளியாகி உள்ளது. நடிகை ரேகா அப்படி யார் கூட சண்டை போடுறாங்க தெரியுமா?

யாரு கூட பிரச்சனை

யாரு கூட பிரச்சனை

புரமோவில் சும்மா சும்மா மொட்டை தல சுரேஷையும், அனிதாவையுமே காட்டி வந்த நிலையில், ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் இடையே நடக்கும் செம சண்டை புரமோ இப்போ வெளியாகி உள்ளது. சனம் ஷெட்டிக்கும், ரேகாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை பஞ்சாயத்து பண்ண வந்த தலைவி ரம்யா பாண்டியனும் டென்ஷன் ஆக்கி விட்டுட்டாங்க..

சண்டை போட இஷ்டம் இல்லை

சண்டை போட இஷ்டம் இல்லை

எனக்கு சண்டை போடணும்னு இஷ்டம் இல்லை சனம்.. என நடிகை ரேகா பேசும் வசனங்களுடன் அவரது மிரட்டலான முகபாவனைகளை பார்த்த நெட்டிசன்கள், அட டா இதுவரை கடலோர கவிதைகள் ரேகாவா இருந்தவங்க, இப்போ ரோஜாக்கூட்டம் பட ரேகாவா மாறிட்டாங்களே என பயந்து நடுங்குகின்றனர்.

கேப்டனுங்க

கேப்டனுங்க

சனம் ஷெட்டி, நான் குளிச்சிட்டு வந்தேன்.. என தனது தரப்பு நியாயத்தை சொல்ல முயல அவரை பேசவிடாமல் கவுன்ட்டர் ஸ்ட்ரைக் கொடுக்கிறார் நடிகை ரேகா. பஞ்சாயத்து பண்ண வந்த தலைவி ரம்யா பாண்டியனை, நான் கேப்டனுங்க.. குக்கிங் டீம் கேப்டன் என பஞ்சர் பண்ணி சிக்ஸர் அடிக்கிறார் நடிகை ரேகா, இந்த பதவி உங்களுக்கு எப்போ கொடுத்தாங்க என கலாய்த்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

சோபா மேல கால் போட்டுகிட்டு

சோபா மேல கால் போட்டுகிட்டு

இந்த சண்டையை குட்டி டவுசர் போட்டுக்கிட்டு, சோபா மேல கால தூக்கி வச்சிக்கிட்டு, சிரித்தபடி பார்க்கும் மொட்டை தல சுரேஷ் வேற லெவல், அவர் பண்ணும் அட்டூழியத்தை புரமோவில் பார்த்தால் நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது. இத்தனை நாள், என்னை வச்சி செஞ்சாங்க, இப்போ உங்களை வச்சி செய்யுறாங்களா? என்ற தொனியில் வேடிக்கை பார்க்கிறார்.

கடும் போட்டி

கடும் போட்டி

எவிக்‌ஷன் லிஸ்டில் முதல் 4 பேரில் நடிகை ரேகா மற்றும் சனம் ஷெட்டி பெயர்கள் அடிபட்டுள்ள நிலையில், எப்படியாவது இந்த வீட்டில் தொடர்ந்து தங்க வேண்டும் என இருவரும் கடும் போட்டி போட்டு வருகின்றனர். அடுத்த புரமோவில், சம்யுக்தாவுக்கும் கேப்ரில்லாவுக்கும் சண்டை நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X