அந்த 4 பேர் மட்டும் இல்ல.. இன்னும் 4 பேரும் எவிக்‌ஷனுக்கு ரெடியாகுறாங்க.. கதை இனிமே தான் இருக்கு!

சென்னை: எங்கடா நேற்று போட்ட எவிக்‌ஷன் புரமோ ஷோவில் காணவில்லையே என கடுப்பான ரசிகர்களுக்கு, நான்காவது நாள் எபிசோடின் ஆரம்பத்திலேயே அந்த காட்சியை காண்பித்து கூலாக்கி உள்ளார் பிக் பாஸ்.

Recommended Video

RamyaPandiyan, SanamShetty and six others nominated for elimination

எவிக்‌ஷன் லிஸ்ட்டுக்கு எப்படி அந்த 4 பேர் தேர்வானர்கள் என்பதை தாங்கி வந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள், யார் வெளியேற போகிறார்கள் என்ற கணிப்புகளை கணிக்கத் தொடங்கி உள்ளனர்.

இன்னும் சிலர் தங்கள் கதைகளை சொல்லி முடிக்காத நிலையில், எப்படி இது என நினைக்கும் ரசிகர்களுக்கான பதிலும் கிடைத்துள்ளது.

மூன்றாம் நாள் முதல் புரமோவில்

மூன்றாம் நாள் முதல் புரமோவில்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 3ம் நாள் முதல் புரமோவில் அடுத்த வாரம் எவிக்‌ஷனுக்கு தேர்வான அந்த 4 பேர் யார் என்பதை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த காட்சி நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதனால், ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள். இன்றைய எபிசோடில் அந்த காட்சி இடம்பெற்றுள்ளது.

சோகக் கதை

சோகக் கதை

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில், வேல்முருகன், சனம் ஷெட்டி, அறந்தாங்கி நிஷா, கேப்ரில்லா, ஆரி அர்ஜுனா, ரியோ ராஜ், ரேகா மற்றும் சம்யுக்தா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் தங்கள் சோகக் கதைகளை கூறினர். அதில், எவிக்‌ஷனுக்கு அனுப்ப வேண்டிய ஆட்கள் யாரென ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் அறிவிக்கப்பட்டது.

பாகுபலி பாலாஜி கணிப்பு

பாகுபலி பாலாஜி கணிப்பு

பாலாஜி முருகதாஸை சனம் ஷெட்டி பாகுபலி என அழைக்கிறார். பின்னர், இதுவரை கதை சொல்லாத 8 பேருடன் சேர்ந்து கொண்டு, பாலாஜி முருகதாஸ் நடத்தும் ஆலோசனையில், நடிகை ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா மற்றும் கேப்ரில்லா ஆகிய 4 பேரை பாலாஜி முருகதாஸ் எவிக்‌ஷனுக்கு பரிந்துரைத்த நிலையில், பிக் பாஸும் அவர்கள் பெயரை முதல் 4 எவிக்‌ஷன் பேர்களாக அறிவிக்கிறார்.

சும்மா கீழ விழுந்தார் அவ்ளோதான்

சும்மா கீழ விழுந்தார் அவ்ளோதான்

பாலாஜி முருகதாஸ் போட்டியாளர்களுடன் பேசும் போது கேப்ரில்லா சின்னப் பொண்ணு அவ கதை ஒண்ணும் சுவாரஸ்யம் இல்லை. சனம் உயிருக்கு போராடினாலும், சும்மா மாடியில இருந்து கீழ விழுந்தார் அவ்ளோ தான். அது ஒரு விபத்து. ஆரி சொன்ன கதையில் ஆழம் இருந்தது. என பேசி அந்த 4 பேரையும் எவிக்‌ஷனுக்கு அனுப்பினார்.

இன்னும் 4 பேர்

இன்னும் 4 பேர்

ஆனால், இந்த 4 பேரில் ஒருவர் மட்டுமே எவிக்‌ஷனுக்கு போகப் போவதில்லை. அடுத்த 8 பேர் கதை சொன்ன பின்னர், 4 பேர் எவிக்‌ஷனுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அந்த 8 பேரில் கடைசி எவிக்‌ஷனுக்கு செல்லும் நபர்களுக்குத் தான் மக்கள் ஓட்டுப் போட்டு காப்பாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X