ஒத்த சொல்லால சொல்லணும்னா.. இவரு உள்ள இருந்தா தினமும் கச்சேரி தான்.. 8வது போட்டியாளர் வேல்முருகன்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் 8வது போட்டியாளராக பாடகர் வேல்முருகன் என்ட்ரி ஆகியுள்ளார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Official Contestant List • Kamal Hassan

கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ஆடி பாடி அசத்தலாக நிகழ்ச்சிக்கு வந்த அவர், கமல்ஹாசன் உடன் பேசும் போதும், ஒரு சூப்பரான பாடலை பாடி உள்ளே நுழைந்தார்.

கிராமிய இசை பாடகரான வேல் முருகன் நிகழ்ச்சியில் இருக்கும் வரை தினமும் கச்சேரி இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நாட்டுப்புற பாடகர்

நாட்டுப்புற பாடகர்

நாட்டுப்புற பாடகரான இவர், ஏகப்பட்ட ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவில் பாடி உள்ளார். சுப்ரமணியபுரம் படத்தில் வந்த மதுர குலுங்க குலுங்க பாடல், நாடோடிகள் படத்தின் ஆடுங்கடா மச்சான், ஆடுகளம் படத்தின் ஒத்த சொல்லால என ஏகப்பட்ட பாடல்களை பாடி அசத்தியவர் வேல் முருகன்.

கெத்து என்ட்ரி

கெத்து என்ட்ரி

கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ஆடி பாடி அசத்தலாக நிகழ்ச்சிக்கு வந்த பாடகர் வேல்முருகன் ஒத்த சொல்லால, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் என ஏகப்பட்ட பாடல்களை பாடி உள்ளே செம கெத்தான என்ட்ரி கொடுத்தார். கமல்ஹாசனை சந்தித்த வேல்முருகனிடம் நாட்டுப்புற கலைகளை போட்டியாளர்கள் மத்தியில் வளர்க்க சொன்னார்.

8வது போட்டியாளர்

8வது போட்டியாளர்

நடிகர் ரியோ ராஜ் முதல் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து சனம் ஷெட்டி, நடிகை ரேகா, அனித சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், ஷிவானி உள்ளிட்டோர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பாடகர் வேல்முருகன் 8வது போட்டியாளராக மாஸ் ஓப்பனிங் கொடுத்தார்.

இரண்டு ரோஜா

இரண்டு ரோஜா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் எல்லாம் செடி ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். பாடகர் வேல்முருகன் மாஸ் ஓப்பனிங் உடன் உள்ளே வந்து தன்னை பற்றிய விவரங்களை எல்லாம் சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள்ளே நுழைந்தார். அவர் 2 ரோஜாக்களை எடுத்து சென்றது குறித்து சக போட்டியாளர்கள் கேள்வி எழுப்ப ஒன்று தங்கைக்கு, மற்றொன்று என இழுக்க நடிகர் ரியோ ராஜ் வந்து அவரை காப்பாற்றி விட்டார்.

தினமும் கச்சேரி தான்

தினமும் கச்சேரி தான்

பிக்பாஸ் வீட்டில் இனி ஒவ்வொரு நாளும் செம கச்சேரி இருக்கும் என்பது கன்ஃபார்ம் ஆகி விட்டது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு இருந்த போட்டியாளர்கள் வந்ததும் வராததுமாக வேல்முருகனை பாடச் சொல்லி கேட்டனர். அவரும் ஆடுகளம் படத்தின் ஒத்த சொல்லால பாடலை பாடி அசத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X