இன்னும் மூன்று நாள் தான் இருக்கு.. பக்கா புரமோவுடன் மிரட்டும் கமல்ஹாசன்.. பிக்பாஸ் பார்க்க ரெடியா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளன என்கிற அறிவிப்புடன் புது புரமோ தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
வழக்கம் போல் நம்மவர் கமல்ஹாசன் இந்த புரமோவிலும் மிரட்டுகிறார்.
அந்த முகத்துல மாஸ்க் மற்றும் மாஸ்க்கே முகம் பன்ச் வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

4வது சீசன்
கர்ட்டைனை விலக்கி, லாக்டவுன் போரிங் போதும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீக்கிரமாக சந்திக்கலாம் என கமல்ஹாசனின் கம்பீரமான முதல் புரமோ வெளியானதில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம ஸ்டைலிஷாக இருந்த உலகநாயகனையும் ரசிகர்கள் ரசித்தனர்.

சொன்னப்படி கேளு
அடுத்ததாக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், சாண்டி மாஸ்டர் கொரியோகிராஃபியில் வெளியான சொன்னப்படி கேளு புரமோவில் கமல்ஹாசன் வேற லெவல் எனர்ஜியில் ஆடிப் பாடி ஆட்டம் போட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது குறித்த அறிவிப்பை அட்டகாசமாக வெளியிட்டு இருந்தார்.

வதந்திகளும் எதிர்பார்ப்புகளும்
பிக் பாஸ் 4ம் சீசன் தொடங்க உள்ள அறிவிப்பு வெளியானதும், பிரபலங்களின் பெயர்கள் போட்டியாளர்களின் பட்டியலாக வதந்திகளாக வலம் வந்தன. அதில், சில பேர், அந்த நிகழ்ச்சிக்கா நான் வரலப்பா என ஓடியே போய் விட்டனர். பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

பிரம்மாண்ட துவக்க விழா
வரும் அக்டோபர் 4ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்கவுள்ள அறிவிப்பையும் அண்மையில் கமல்ஹாசன் கூறி இருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் 3 நாட்களே உள்ளது என்ற புது புரமோ ஒன்றையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இன்னும் மூன்று நாட்கள் தான்
இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே, கமல் சார் தினமும் இன்னும் 5 நாட்கள் தான், என்றும் நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவும் தப்பில்லை என 4 நாள் புரமோவையும் பேசிய டீசர்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது 3 நாட்கள் மட்டுமே உள்ளதற்கு செம பன்ச் வசனம் ஒன்றையும் கமல் பேசியுள்ளார்.

முகமே மாஸ்க்
"நாம முகத்துல மாஸ்க் போட்டுட்டு இருக்கோம்.. ஆனால், மாஸ்க்கே முகமா போட்டுகிட்டு இருக்கவங்க நிறைய பேர் இருக்காங்க.. த்ரீ டேஸ் டு கோ பிக்பாஸ்" என செம மாஸான புரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சீசன் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்
ஆனால், அதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதை குறிப்பிட்டு, ஏகப்பட்ட ரசிகர்கள் அதைத் தான் பார்ப்பார்கள் என சிலர் ட்ரோல் செய்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் ஒன்றை டிவியிலும், மற்றொன்றை மொபைலிலும் பார்ப்போம் என்றும் கூறுகின்றனர். செம டஃப் தான் போல!


Click it and Unblock the Notifications











