twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ் சீசன் 5 ஆடிஷன் எப்படி நடக்குது தெரியுமா..இது வரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்

    |

    சென்னை : அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறி உள்ளது. இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் இப்போது தான் 5 வது சீசன் துவங்க உள்ளது. ஆனால் இந்தியில் 14 சீசன்கள் முடிந்து விட்டது.

    டிவியில் மட்டுமல்ல ஓடிடி தளங்களிலும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகரித்து வருவதால் இந்த முறை தமிழில் வித்தியாசமான முறையில் இதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    அதிரடியாக தயாராகும் தூம் 4... வில்லனுக்கு பதில் வில்லியா...அதுவும் இவரா? அதிரடியாக தயாராகும் தூம் 4... வில்லனுக்கு பதில் வில்லியா...அதுவும் இவரா?

    வழக்கமாக சினிமா நடிகர் - நடிகைகள், டிவி பிரபலங்கள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர். ஆனால் இந்த முறை பிரபலங்களுடன் சாமானியர்களும் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கிறார்களாம். இதனால் முதல் முறையாக ஆடிஷன் எப்படி நடத்தப்படுகிறது என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளனர்.

    பிக்பாஸில் முதல் முறை

    பிக்பாஸில் முதல் முறை

    பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழில் தான் சாமானியர்களும் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாம். பிக்பாஸில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் விளக்கி கூறப்பட்டுள்ளது. பிக்பாஸில் பங்கேற்பதற்கான முன்பதிவு 2 மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்டுள்ளது.

     என்ன தகுதி இருக்கணும்

    என்ன தகுதி இருக்கணும்

    பிக்பாசில் கலந்து கொள்பவர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். இதற்கான உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட, குற்ற பின்னணி இல்லாதவராக இருக்க வேண்டும். நல்ல உடல் மற்றும் மனரீதியான ஆரோக்கியத்தை நிரூபிக்க சான்று வைத்திருக்க வேண்டும். தமிழில் நன்றாக பேச தெரிந்தவராக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பலருக்கும் தெரிந்தவராகவும், அதிகமான ஃபாலோயர்சை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

    எப்படி முன்பதிவு செய்வது

    எப்படி முன்பதிவு செய்வது

    1. முதலில் VOOT ஆப் டவுன்லோட் அல்லது www.voot.com/BiggBoss இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    2. அதிலுள்ள பிக்பாஸ் தமிழ் முன்பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    3. அந்த படிவத்துடன், 3 நிமிடம் அல்லது 180 நொடிகளுக்கு மிகாமல் உங்களை பற்றிய வீடியோவை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அப்புறம் என்ன நடக்கும்

    அப்புறம் என்ன நடக்கும்

    நீங்கள் முன்பதிவு செய்த உடன் பிக்பாஸ் தமிழ் குழுவினர் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் உங்களை தொடர்பு கொள்வார்கள். போட்டியாளர்கள் தேர்வு பற்றிய விபரங்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.

     சுவாரஸ்யமான வீடியோ

    சுவாரஸ்யமான வீடியோ

    ஆடிசனுக்காக அனுப்பும் 3 நிமிட வீடியோவில் உங்களின் திறமைகள் அனைத்தையும் தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல வேண்டுமாம். மிக சுருக்கமாகவும், அனைவரையும் கவரும் விதமாக உங்களை பற்றிய அறிமுகம் இருக்க வேண்டுமாம். ஆடிஷன் வீடியோ தேர்வாகும் பட்சத்தில், அந்த நபருக்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுமாம்.

    English summary
    Bigg Boss Tamil Season 5 (2021) Audition & Online Registration Details
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X