கேமுக்காக இப்படியா பண்ணுவீங்க… கதறி அழும் தாமரை… வெளியானது அழுகாச்சி ப்ரோமோ !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இன்றைய ய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் தாமரை கதறி அழுதுக்கொண்டு இருக்கிறார்
அவரை மற்ற போட்டியாளர்கள் சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் .
தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவால் இன்னைக்கு பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் சம்பவம் இருக்கும் என்று , இப்போதே நிகழ்ச்சிக்கு தயாராகி விட்டனர் பிக் பாஸ் ஃபேன்ஸ்

நாமினேஷன் லிஸ்ட்
பிக் பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இசைவாணி, அக்ஷரா, பாவனி , இமான், வருண், சின்னப்பொண்ணு, பிரியங்கா, தாமரைச் செல்வி.ஸ்ருதி என 9 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்

மதுமிதா கேப்டன்
பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக மதுமிதா தேர்வு செய்யப்பட்டார். முதல் வாரத் தலைவரை தேர்வு செய்யும் போது பலூனை உடைக்கும் டாஸ்க் வைக்கப்பட்டது. இந்த வாரத்தில் நேம் கேம் மற்றும் வலையில் பந்தை பிடிப்பது என சின்னபுள்ளத்தனமாவே டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இருந்தாலும் இதை பார்க்க ஜாலியாத்தான் இருக்கிறது என்கின்றனர் பிக் பாஸ் பிரியர்கள்.

காயினை திருடிய ஸ்ருதி
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் தாமரை அசந்த நேரத்தில் அவர் வைத்திருந்த காற்று காயினை ஸ்ருதி ஆட்டையை போட்டுவிடுகிறார். இது தெரிந்த தாமரை ஸ்ருதியிடம் நீ பண்ணது துரோகம் என்கிறார். இதற்கு ஸ்ருதி அக்கா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க, திருடுவதுதான் கேம் என்கிறார். நாணயத்தை பறிகொடுத்த தாமரை கண்ணீர் விட்டு இங்கே கொண்டு வந்து என்னை விட்டுட்டாங்களே என்று கூறுகிறார்.

இப்படியா விளையாடுவீங்க
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் தாமரை கதறி அழுதுக்கொண்டு , ஒரு கேமுக்காக இப்படியா விளையாடுவீங்க ச்சீ... என்கிறார். இதற்கு ஸ்ருதி தேவையில்லாத வார்த்தையை விடாதீங்க என்கிறார். இதற்கு தாமரை நான் காயினை பத்தியே பேசல நீ பண்ண வேலை எனக்கு பிடிக்கவில்லை என்கிறார். அப்போது குறுக்கிடும் பாவனி நான் அவளுக்கு உதவி பண்ணவில்லை என்கிறார். இந்த காயின் உனக்குத் தேவையா என்று ஆத்திரத்தில் கத்துகிறார் பாவனி . 2வது ப்ரோமோவே செமயா இருக்கு அப்போ பிக் பாஸ் வீட்டில் இன்னைக்கு நிச்சயம் பஞ்சாயத்து இருக்கும் போல... எது எப்படியோ நாம ஜாலியா இருப்போம்.


Click it and Unblock the Notifications











