அப்ப நான் யாரு?... ஐக்கி பெர்ரியால் வந்த சண்டை… பிரியங்கா, நிரூப் நட்பில் விரிசல் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், பிரியங்கா நிரூப்பிடம் இனிமேல் பேசவே மாட்டேன் என்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் முதலில் குரூப்பிசத்தை ஆரம்பித்தது பிரியங்கா தான். அபிஷேக், பிரியங்கா, நிரூப் 3 பேரும் மினி அன்பு டீம் போல செயல்பட்டு எப்போது பார்த்தாலும் கூடி கூடி பேசிக்கொண்டு இருந்தனர்.

இதேபோல பஞ்சதந்திர டாஸ்கிலும், மூன்று பேரும் திட்டம் போட்டு நாணயத்தை திருடினர். பிரியங்காவும் நம்ம விளையாடுவதை பார்த்து மற்றவர்களும் நம்மோடு சேர்ந்து விளையாட ஆசைப்பட வேண்டும் என்று மாஸ்டர் பிளான் எல்லாம் போட்டார்.

அபிஷேக் வெளியேற்றம்

அபிஷேக் வெளியேற்றம்

ஆனால் அபிஷேக் திடீரென வெளியேறியதால், பிரியங்கா சற்று கலங்கிப்போனார். அதுமட்டும் இல்லாமல் கமலும் பிரியங்காவை அதட்டினார். இதனால், கடந்த சில வாரங்களாக பிரியங்கா அடக்கி வாசித்து வருகிறார்.

மனக்கசப்பு

மனக்கசப்பு

பஞ்சதந்திர டாஸ்கில் 3 பேரும் சேர்ந்து எடுத்த நாணயத்தை நிரூப் மட்டுமே தனதாக்கிக்கொண்டதால், பிரியங்காவுக்கும், நிரூப்பிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, அவ்வப்போது சண்டை நடைபெற்று வந்தது. நீயும் பொம்மை, நானும் பொம்மை தெரியும் உண்மை டாஸ்கிலும் பிரியங்கா தோற்க வேண்டும் என்று ஓடி ஓடி விளையாடினார் நிரூப்.

3வது ப்ரோமோ

3வது ப்ரோமோ

இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், பிரியங்கா அவனா பேசுற வரைக்கும் நான் அவன் கூட பேச மாட்டேன் என்கிறார். மேலும், இந்த வீட்டிற்கு வந்த நாள் முதல் அவன் என்னுடைய ப்ரண்ட், அவனுக்கு தெரியும் எனக்கு அது பிடிக்கவில்லை என்று இருந்தும் அவன் அப்படி பண்றான் என்று கூறி கண்கலங்குகிறார். அப்போது அங்கு வரும் நிரூப், நான் சொன்ன ஒரே வார்த்தைக்காக கடைசி வரைக்கும் எனக்காக ஓடி என்னை ஜெயிக்கவைத்தாள் என்கிறார். உடனே குறுக்கிட்டு பேசிய பிரியங்கா... ஓ இனிமே எப்படி இருக்கும் உங்க ரிலேஷன்ஷிப் என்கிறார், உடனே நிரூப் அவ என் ப்ரண்ட் என்று கூறிய அடுத்த நொடியில் பிரியங்கா அப்போ நான் என்கிறார்.

நிரூப் மீது பாசம்

நிரூப் மீது பாசம்

பிரியங்கா நிரூப்பின் மீது மிகவும் பாசம் வைத்துள்ளார். என்னத்தான் நிரூப் சுயநலமாக விளையாடினாலும் ஒரு முறை கூட பிரியங்கா நிரூப்பை விட்டுக்கொடுத்து பேசியது இல்லை. தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவால் இன்றைக்கும் வீட்டில் அழுகாச்சி காட்சி இருக்கும் போல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X