இசைவாணிக்கு ஏன் தடையா இருக்கீங்க?... இமானை கேள்வி கேட்ட கமல் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில், இசைவாணியின் கண்ணாடியாக இருந்து அவரைப்பற்றி குறை நிறைகளை கூறுகிறார் இமான்.
கண்ணாடி டாஸ்கில் இமானின் பிம்பமாக இருந்த இசைவாணி அவரை பற்றி பல குறைகளை கூறியிருந்தார். தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் இசைவாணி பற்றி கூறுகிறார் இமான்.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாளிலிருந்தே இமாம் அண்ணாச்சிக்கும் இசைக்கும் ஏதோ ஒரு வகையில் சண்டை வந்து விடுகிறது. இமானும், இசைவாணியைத் தவிர மற்ற அனைவர் இடத்திலும் அன்பாகவே இருந்து வருகிறார். உள்ளதை உள்ளபடி காட்டும் டாஸ்கில் இவர்கள் இருவரையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்தார் பிக் பாஸ்.

கண்ணாடி டாஸ்க்
கண்ணாடி டாஸ்க்கில் இமான் அண்ணாச்சியின் கண்ணாடியாக மாறிய இசைவாணி, அண்ணாச்சி என்னவெல்லாம் செய்கிறாரோ அதை போலவே அவரும் செய்து வந்தார். இதையடுத்து, அண்ணாச்சி பற்றி மனதில் நினைப்பதை பேசி இசை, இந்த வீட்டில் யாரையும் பேச விடாமல் நீங்களே பேசுறீங்க, மற்றவர்களின் கருத்துக்களை மதிப்பது இல்லை, வளர்ந்து வருபவர்களை காயப்படுத்தாதீங்க என்று பேசி இருந்தார்.

முதல் ப்ரோமோ
நேற்று பிரியங்காவின் பிம்பமாக மாறி தாமரையை பேச சொன்னது போல இசைவாணியின் கண்ணாடியாக மாறி இமான் அண்ணாச்சி பேசுவது போல இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில், கமல், நீங்க அவங்க பிம்பமாக இருக்க முடியுமா என்று அண்ணாச்சியிடம் கேட்கிறார், அதற்கு பெருசா எதுவும் இருக்காதே சார் என்கிறார் இமான்.

மீண்டும் சண்டை
இதையடுத்து, இசைவாணியின் பிம்பமாக மாறிய அண்ணாச்சி, நீ ஒரு கருத்தை சொல்ற, அதுக்கு இல்ல பாப்பா, இப்படி ஒரு விஷயம் இருக்குனு சொல்லவந்தா, புரிஞ்சி இருப்பீங்கனு நான் நம்புனேன். ஆனால் ஞாயிற்றுக்கிழமை புரிஞ்சிக்கிறீங்க செவ்வாய்க்கிழமை திரும்பவும் மாறிடுறீங்க என்கிறார். அடுத்து பேசும் இசைவாணி, உன்னை பற்றி சொல்ல ஒன்னுமே இல்லைனு சொன்னாரு, இப்போ, இங்க வந்து எல்லாத்தையும் சொல்றாரு என்றார். உடனே கமல், அவங்க கருத்துக்களை கேட்காமல் தடையாக இருக்கீங்களா இமான் என்று கேள்வி கேட்பது போல முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

எலிமினேட்டா ?
பிக் பாஸ் வீட்டிலிருந்து இசைவாணி எலிமினேட்டாகி உள்ளதாக இணையதில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. அவர், மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதால் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











