மக்கள் எனக்கு பிச்சை போட்டிருக்காங்க... மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அபிஷேக் !

சென்னை : பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக் பாஸ் வீடு சேனலாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கிற்காக போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ரெட் டிவி மற்றும் ப்ளு டிவியாக மாறி உள்ளனர்.

இன்றைய எபிசோடு நேற்றைய எபிசோடு போல சண்டை சச்சரவு இல்லாமல் இன்றைய எபிசோடு கலகலப்பாக சென்றது.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்

இதில், ப்ளு டிவி செய்தியாளராக ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி இருந்தனர். இவர்கள் கேள்வி என்ற பெயரில் மற்றவர்களை கடுப்பேத்தாமல் நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் பல கேள்விகளை கேட்டனர். அப்போது ராஜு நிரூப்பிடம் இந்த வீட்டில் யார் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு பிரியங்கா மற்றும் ராஜு மீது என்று பதில் கூறினார் நிரூப்

நீ என் செல்லக்குட்டி

நீ என் செல்லக்குட்டி

நிரூப்பின் பதிலால், மிகவும் அப்செட்டாகிப் போன அபிஷேக், எனக்கும் பிரியங்காவுக்கும் அன்பை கொடுக்க மட்டும் தான் தெரியும், நீ என்னை வச்சி செய்தாலும் நீ தான் என் செல்லக்குட்டிடா, அன்பு கொடுப்பதில் லாஜிக் பார்க்காதே, எனக்கு அன்பு கொடுக்க மட்டும்தான் தெரியும் என்றார்.

60 நாள் ஆச்சு

60 நாள் ஆச்சு

மேலும் பேசிய, அபிஷேக், நிரூப் பிரியங்கானு தான், நான் இருக்கும் போதும் பேசுனாங்க இப்பவும் அதைத்தான் சொல்றாங்க, 60 நாள் ஆட்சி இன்னுமா இதைபற்றி பேசுவது போரடிகிறது என்றார். நான் என்னை கொளுத்திக்கொண்டு ஒருவனுக்கு பாதை கிடைக்கும் என்றால் நான் அதை நிச்சயம் செய்வேன்.

மக்கள் பிச்சை போட்டிருக்காங்க

மக்கள் பிச்சை போட்டிருக்காங்க

மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்காங்க , மீண்டும் இந்த ஷோவில் என்னை கொண்டு வந்து இருக்கிறார்கள்.அவர்கள் எதிர்பார்க்கும் சுவாரஸ்யத்தை நான் என்னை கொளுத்திவிட்டு கூட கொடுப்பேன்டா என்று ஆவேசமாக அபிஷேக் பேசினார்

Recommended Video

Pavani கிட்ட Thamarai ஒரு மணி நேரம் என்ன பேசினார் | Bigg Boss 5 Tamil Day 58 Mini's View
காமெடியா இருக்கு

காமெடியா இருக்கு

அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து, எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் அமைதியாக இருந்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக பிரியங்கா மற்றும் நிரூப் இருவரையும் மற்ற போட்டியாளர்கள் கார்னர் செய்வதை பார்த்துவிட்டு தற்போது பொங்கி எழுந்து விட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் அபிஷேக் அடுத்த பர்ஃபாமென்ஸை ஆரம்பித்துவிட்டார் என்றும் இதை பார்த்தால் சீரியஸா இல்ல ரொம்ப காமெடியா இருக்கு என்றும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X