இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கல்ல பிக் பாஸ் வீட்டில் ஒன்னும் இல்லாமல் போன சண்டை

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக போட்டியாளர்கள் அனைவரும் அட்டகாசமாக விளையாடி வருகின்றனர்.

ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து தானாகவே வெளியேறிய நிலையில், நேற்று நாதியா சாங் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

தலைவர் பதவிக்கான தேர்வு

தலைவர் பதவிக்கான தேர்வு

இன்று திங்கட்கிழமை என்பதால் தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில், பிக்பாஸ் அழைப்பு வந்தவுடன் முதல் ஆளாக வந்து காத்திருந்த, இசைவாணி, பாவனி, ராஜு, சிபி ஆகியோர் இந்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டி ஈடுகின்றனர். அதேபோல, கூட்டத்தில் ஜொலித்தவராக இமானும் இந்த வார தலைவர் போட்டிக்கு போட்டி இருகிறார். மொத்தம் 5 பேர் தலைவர் பதவிக்கு போட்டி இட்டனர்.

டாஸ்கின் பெயர் என்ன பீலிங்

டாஸ்கின் பெயர் என்ன பீலிங்

தலைவர் பதவிக்கு நடைபெறும் டாக்ஸின் பெயர் என்ன பீலிங் என வைக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களது எந்த உணர்வையும் காட்டாமல் இறுதிவரை இருப்பவரே தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த போட்டியில் சிரித்து தனது உணர்வு வெளிப்படுத்தியாதால் இமான் தலைவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பெண் உடையில்

பெண் உடையில்

ராஜுவை மற்ற ஹவுஸ்மெட்டுகள் சிரிக்கவைக்க முயற்சி செய்தனர். ஆனால் ராஜு கடைசி வரை சிரிக்கவே இல்லை. இதையடுத்து, பாவனி, சிபி, இசைவாணி அனைவரும் சிரிக்க வைக்க முயன்றர். ஆனால் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, அபிஷேக் மற்றும் நிரூப் பெண் உடை அணிந்து கொண்டு இசைவாணியை சிரிக்க வைக்க முயற்சி செய்தனர்.

இசையை சீண்டிய அபிஷேக்

இசையை சீண்டிய அபிஷேக்

இசையை சீண்டும் விதமாக அபிஷேக் 30 ரூபாய்க்கு சட்டை வாங்கி போட்ட என்று சின்னவயதில் இருந்து நீ கஷ்டப்பட்டது எல்லாம் போதாதா? அப்படி கஷ்டப்பட்டு இந்த டாஸ்கில் நீ வெற்றி பெற வேண்டுமா? ஒரு சட்டை வாங்க கூட எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாய் என பேசுகிறார்.

புண்படுத்தவில்லை

புண்படுத்தவில்லை

இதனால் ஆத்திரமடைந்த இமான், டாஸ்கில் இப்படியெல்லாம் பேச கூடாது, சிரிக்க மட்டும் வையுங்கள் என்கிறார். அதற்கு வருண், நாங்கள் யாரையும் புண்படுத்தவில்லை, அவர் கதையை கூறினால் எமோஷனல் அவர் என்பதால் இப்படி சொல்கிறோம் என்கிறார். இதற்கு அண்ணாச்சி, நீங்க சிரிக்க வைக்க முயற்சி பண்ணுங்க தம்பி என்கிறார். இதையடுத்து, மிகுந்த கோவத்துடன் வரும் அபிஷேக் ஒட்டுமொத்த டாஸ்க்கையும் ஒழிச்சிட்டீங்க என்று கத்துகிறார். இதனால், அபிஷேக்கிற்கும் அண்ணாச்சிக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி, நீ பெரிய புத்திசாலிமாதிரி என்கிட்ட பேசாதே என்று சீறினார் அண்ணாச்சி,

எனக்கு கவலையே இல்லை

எனக்கு கவலையே இல்லை

அய்யோ.... போங்க அண்ணாச்சி சும்மா புத்திசாலி... புத்திசாலினு ஏன் என்னை தள்ளிக்கிட்டே இருக்குறீங்க... நீங்க தான் குரூப் சேர்க்குறீங்க... உங்களுக்கு ராஜு தான் முக்கியம்... நான் முக்கியம் இல்லைனா பரவால.. எனக்கு கவலையே இல்லை, இப்போ போக சொன்னாலும் நான் சந்தோஷமா வீட்டுக்கு போவேன் எனக்கு பளு இருக்கு நான் வெளியில போய் எதாவது பண்ணிப்பேன் என்றார். அபிஷேக், இப்படி கோவமாக பேசும் போது பிரியங்கா இதெல்லாம் டூமச் இப்படி பேசாதே என்கிறார். நான் அப்படித்தான் பேசுவேன் என்று முகத்தில் அடிப்பது போல அபிஷேக் பேசுகிறார். கடைசியிலே அதுவும் எல்லாமே பேசிவைத்துகொண்டு இப்படி சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X