நீங்க உங்க வேலையை பாருங்க… நேரடியாக மோதிக்கொண்ட இமான் அண்ணாச்சி, அபினய்!

சென்னை : நீங்க உங்க வேலையை பாருங்க என்று அண்ணாச்சியிடம் நேரடியாக அபினய் கூறியுள்ளார்.

அண்ணாச்சி எப்போதும் மனதில் நினைப்பதை அப்படியே சொல்லி விடுவார். நாமினேஷனில் அவரின் பெயர் அடிக்கடி வர அவரின் இந்த குணமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

போன வாரம் இசைவாணியை சர்வாதிகாரி என்று கூறி அவரை அழவைத்தார். இந்த வாரம் பாவம் அபினய் மாட்டிக்கொண்டுள்ளார் .

சினிமா சினிமா டாஸ்க்

சினிமா சினிமா டாஸ்க்

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் ஊரு விட்டு ஊருவந்து டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கில், சிறப்பாக செயல்பட்டதற்காக ராஜு, சிபி வெற்றி பெற்றார்கள். இந்த வாரம் சினிமா சினிமா என்ற டாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு, அந்த கதாபாத்திரமாக அவர்கள் மாற வேண்டும். லிவ்விங் ஏரியாவில் நடைபெற்ற இந்த டாஸ்கில் கதாபாத்திரத்திற்கான பாடல் ப்ளே ஆனவுடன் போட்டியாளர்கள் நடனம் ஆட வேண்டும்.

கோவை சரளா

கோவை சரளா

இதில் பிரியங்கா வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்திலும், ராஜு,எம்.ஆர்.ராதா கெட்டப்பை போட்டு இருந்தார். தாமரைச்செல்வி கோவை சரளா கதாபாத்திரத்தில் இருந்தார். அவர் கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற முந்தி முந்தி விநாயகரா என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இபோல படையப்பா கெட்டப்பை போட்ட சிபி, படையப்பா திரைப்படத்தில் வரும் என் பேரு படையப்பா பாடலுக்கு நடனம் ஆடினார்.

விக்ரம் கதாபாத்திரம்

விக்ரம் கதாபாத்திரம்

இந்த சினிமா சினிமா டாஸ்கில் அபினய்கு தெய்வமகள் திரைப்படத்தில் வரும் விக்ரம் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது இதற்காக அந்த திரைப்படத்தில் விக்ரம் வருவது போல ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு, தலையை அவ்வப்போது சொறிந்துக்கொண்டு நிற்கிறார் அபினய்.

அண்ணாச்சி பேசுறது பிடிக்கல

அண்ணாச்சி பேசுறது பிடிக்கல

சினிமா சினிமா டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக பிக் பாஸ் அறிவித்தார். இதையடுத்து, அபினய், மதுமிதாவிடம் அண்ணாச்சி என்கிட்ட பேசுனது எனக்கு பிடிக்கவில்லை, அவர் அடிக்கடி என்னிடம் கேரக்டரில் இருங்க... கேரக்டரில் இருங்க என்று சொன்னாரு என்றார்.

நீங்க சொல்லாதீங்க

நீங்க சொல்லாதீங்க

சில பேர் எப்பவும் அப்படித்தான் அடுத்தவர்களை கீழே தள்ளி பேசுவார்கள் அது எனக்கு பிடிக்கல, இதனால், நான் அவர் கிட்ட போய், நான் கேரக்டரில் தான் இருக்கேன் நீங்க சொல்லாதீங்க நான் அதை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X