பிக் பாஸ் 5 : இதுதான்ய்யா என்ட்ரி... மாஸா வந்த தளபதியின் நெருங்கிய நண்பன் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில், பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் வந்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு நடன இயக்குனர் அமீர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். தற்போது, சஞ்சீவ் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

அக்ஷரா அழுகை
பிக் பாஸ் வீட்டி இந்த வாரத்தின் தலைவராக அபிநய் செயல்பட்டு வருகிறார். தற்போது பிக் பாஸ் வீட்டில் கனா காணும் காலங்கள் என்கிற லக்ஸரி டாஸ்க் ஏறத்தாழ சுவாரசியமாக இருக்கிறது. பல இடங்களில் சிரிப்பை அடிக்க முடியவில்லை . நேற்று சிபிக்கும் அக்ஷராவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து , அக்ஷராவை அழைத்த பிக் பாஸ் அவரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. நேற்று முழுவதும் அக்ஷரா தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தார்.

மாஸ் எண்ட்ரி
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது இதில், இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் வந்துள்ளார். அவரை அனைத்து போட்டியாளர்களும் கலகலப்பாக வரவேற்றனர். சஞ்சீவும் அண்ணாச்சி எங்கே அவர் வந்தா தான் நான் வீட்டிற்குள் வருவேன் என்று கலாட்டா செய்கிறார்.

விஜய் பார்கிறாரா
போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்கு என்று கேட்கிறார்கள் , உடனே சஞ்சீவ் எல்லா சீசனைப்போல நன்றாக இருக்கு என்றார். உடனே ஹவுஸ்மேட்ஸ் விஜய் இந்த நிகழ்ச்சினையை பார்க்கிறாரா என்று கேட்டனர். இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை ஆட்டுகிறார் சஞ்சீவ்.

விஜய்யின் நண்பர்
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இதையடுத்து, நடனக் கலைஞரான அமீர் நுழைந்தார் தற்போது இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகர் சஞ்ஜீவ் வந்துள்ளார். நடிகர் சஞ்சீவ் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சஞ்சீவ் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராவார்.


Click it and Unblock the Notifications











