நம்ம வாய் நல்லா இருந்தா.. எல்லா வீடும் நல்ல வீடு தான்.. இன்னும் 4 நாட்களில் பிக் பாஸ் தமிழ் 5!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ளதாக அதிரடியான புதிய புரமோவுடன் வந்துள்ளார் உலக நாயகன்.
வரும் அக்டோபர் 3ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அட்டகாசமாக ஆரம்பமாக போகிறது.
வரும் ஞாயிறு மாலை 6 மணி முதல் பிரம்மாண்ட தொடக்க விழா நிகழ்ச்சி ஆரம்பித்து நள்ளிரவு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 4 நாட்களில்
பிக் பாஸ் சீசன் 4 இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த சீசனான பிக் பாஸ் தமிழ் 5 வரும் அக்டோபர் 3ம் தேதி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது. இன்னும் நான்கு நாட்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கப் போவதாக அதிரடியான புதிய புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் தீம்
ஒரு வீட்டில் 16 போட்டியாளர்களை கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு செல்போன், டிவி, நியூஸ் பேப்பர் மற்றும் குடும்ப உறவுகளுடன் பேச முடியாதபடி அடைத்து வைத்து அதில் யார் எத்தனை நாட்கள் சர்வைவ் செய்து வெற்றியாளராக மாறுகின்றனர் என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீம்.

நல்ல வீடா
இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் கவுன்ட் டவுன் ஆரம்பமாகி விட்டது. தினமும் ஒரு புதிய புரமோவுடன் கமல் ஆஜர் ஆகிவிடுகிறார். 5 நாள் இருக்கு என நேற்று புரமோ வெளியாகி டிரெண்டான நிலையில், இன்னும் நான்கு நாட்கள் தான் உள்ளது எனும் புரமோவில் இந்த வீடு நல்ல வீடான்னு கேட்கிறாங்க என பிக் பாஸ் வீடு குறித்து குவியும் விமர்சனங்கள் பற்றி பேசியுள்ளார் கமல்ஹாசன்.
Recommended Video

நம்ம வாய் நல்லா இருந்தா
"இந்த வீடு நல்ல வீடான்னு கேட்கிறாங்க.. நம்ம வாய் நல்லா இருந்தா.. எல்ல வீடும் நல்ல வீடு தான்" என அந்த கேள்விக்கு விடையையும் கமல்ஹாசனே கலக்கலாக கூறும் சூப்பர் புரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

செல்ஃப் ட்ரோல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை களமிறக்குவதும், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய ட்ரோல்களை செல்ஃப் ட்ரோல்களாக அலசி அது குறித்து பேசி விளக்குவதும் கமல்ஹாசனுக்கு கை வந்த கலை தான் என ரசிகர்கள் புரமோவுக்கு கீழ் கமெண்ட் அடித்து வருகின்றனர். பிக் பாஸ் வீடு பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன் என பல பிரபலங்கள் வெளிப்படையாக கூறி வரும் நிலையில், நீங்க ஒழுங்கா இருந்தா பிக் பாஸ் வீடும் ஒழுங்கா இருக்கும் என்பதை ஆணி அடித்தாற் போல கூறியுள்ளார் ஆண்டவர்.

16 போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் 16 போட்டியாளர்கள் இவர்கள் தான் என ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டு வருகின்றன. சில பிரபலங்கள் இதில் கன்ஃபார்ம் பட்டியலில் உள்ளனர். ஷகீலா மகள் மிலா, நமிதா மாரிமுத்து, ஷாலு ஷம்மு, சந்தோஷ் பிரதாப், பிரியா ராமன், இமான் அண்ணாச்சி, சின்ன பாப்பா என ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டு வருகின்றன. வரும் சனிக்கிழமை நிகழ்ச்சி ஷூட்டிங் நடைபெறும் போதே இணையத்தில் புகைப்படங்கள் கசியத் தொடங்கி விடும்.


Click it and Unblock the Notifications











