குண்டக்க மண்டக்க கேள்வி கேட்ட சிபி… கருத்தா பதில் சொன்ன தாமரை !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில்,இன்று இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் தொடங்கியது இதற்காக பிக் பாஸ் வீடு செய்தி சேனலாக மாற்றப்பட்டது.
இதில்,செய்தியாளராக வந்த சிபி, தாமரையை குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டார், ஆனால் அனைத்து கேள்விக்கு தாறுமாறாக பதில் கூறினார் தாமரை.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் பேசு பொருளாக இருப்பவர் தாமரை தான். பிக்பாஸ்னா எனக்கு என்னவேண்றே தெரியாது நான் இதைபார்த்தது கூட இல்லை என்று கூறிய தாமரை அனைத்து போட்டியாளர்களைவிட சூப்பரா விளையாடி வருகிறார்.

தாமரை
இணையத்திலும் அவருக்கு ஆதரவாக பல கருத்துக்கள் வருகின்றன. கமல் வரும் போது மட்டும் அடக்கிவாசிக்கும் தாமரை, இந்த வாரம் ரம்யாகிருஷ்ணன் முன்பு , பிரியங்காவை வெளுத்து வாங்கினார். அதுமட்டும் இல்லாமல், நீங்க இப்படி பேசுவதுதான் உங்களுக்கு அழகு என்று கூறி, சும்மா ஆடுன காலுக்கு சலங்கை கட்டிவிட்டார் ரம்யா கிருஷ்ணன்.

பிரேக்கிங் நியூஸ்
இதையடுத்து பிக் பாஸ் வீட்டில், இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க், பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸாக மாறி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரம் நடக்கும் விஷயத்தில் பல விஷயங்களை காட்டுவதில்லை என போட்டியர்களே வெளிப்படையாக புலம்பும் நிலையில், அதை வெளிப்படையாக தெரிவிக்க போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இரண்டு செய்தி சேனலாக பிரிய வேண்டும். இந்த டாஸ்கிற்காக போட்டியாளர்கள் ரெட் டிவி, ப்ளு டிவி என இரு டீமாக பிரிந்தனர்.
Recommended Video

கருத்தான பதில்
ரெட் டிவி செய்தியாளராக வந்த சிபி, காலையில் நிலா தெரியுமா.. உங்களுக்கு என்ன தெரியும்... என்ன தெரியாது.. நிறைய விஷயம் தெரியாது தெரியாதுனே சொல்றீங்களே என தாமரையை மடக்கி மடக்கி கேள்வி கேட்டார் சிபி. ஆனால், தாமரை எல்லாம் தெரிஞ்சவங்களும் இல்லை.. எதுவுமே தெரியாதவங்களும் இல்லை என கருத்தா பதில் சொன்னார். போகிற போக்கை பார்த்தால் டைட்டில் வின்னராக தாமரைத்தான் வருவார் போல.


Click it and Unblock the Notifications











