பவானி ஸ்ட்ராக் ப்ளேயர்... நாங்க வீக் ப்ளேயரா… அபிஷேக்கை நோஸ்கட் பண்ண ஸ்ருதி!
சென்னை : பிக் பாஸ் சீசன்5, இன்று 18வது நாளை எட்டியுள்ளது. கடந்த இரண்டு வாரமாக அமைதியாக இருந்த வீட்டில், பஞ்சதந்திர டாஸ்க் மூலம் பிரச்சினையை கொளுத்தி போட்டார் பிக் பாஸ்.
இதையடுத்து எலிமினேஷனிலிருந்து தப்பித்துக்கொள்ள போட்டியாளர்கள் நாணயத்தை திருடுவதும், மறைத்து வைப்பதுமாக உள்ளனர்.
அபிஷேக் எப்படியாவது நாணயத்தை எடுக்க வீட்டுக்குள்ளேயே டீமை உருவாக்கி டீல் பேசி வருகிறார்.

வருண் ஜெயிக்கக்கூடாது
மற்ற போட்டியாளர்களை விட பிரியங்கா மற்றும் அபிஷேக் மட்டும் அந்த வீட்டை தலைகீழாகத் திருப்பி போட்டு விளையாடி வருகின்றனர். காலையில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், அபிஷேக், பாவனியிடம் டாப் 5ல் நீயும் நானும் இருக்க வேண்டும். வருணை மட்டும் ஹாலில் விட்டுவிடாதே. அவன் மட்டும் ஜெயிக்கக்கூடாது என சொல்கிறார்.

அபிஷேக் டபுள் கேம்
உடனே பாத்ரூமுக்கு சென்று வருணிடம் உன்னால் ஹாலுக்கு செல்ல முடியாது, பாவனி உன்னை உள்ளே விடமாட்டாள் என்று சொல்கிறார். திரும்பவும் பாவனியிடம் சென்று நான், ஹாலுக்கு வந்து காட்டுறேனு வருண் சேலஞ்சு விடுறான் என்று இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பேசுவது போல ப்ரோமோ வெளியானது.

ஸ்ருதி நோஸ்கட்
தற்போது 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதிலும் , அபிஷேக், ஸ்ருதியிடம் என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, ஆன அதுக்கு நீ நோ சொல்லப்போறனு தெரியும். மெஜாரிட்டி கையவிட்டு போகக்கூடாது நல்ல யோசி என்கிறார். இதற்கு ஸ்ருதி ஏன் டீமா யோசிக்கிற, நான் இசைவாணிக்கூட இருக்கிறேன் என்கிறார். பாவனி கிட்ட டீல் பேசுற... பாவனி ஸ்ட்ராங் ப்ளேயர்... நாங்க வீக் ப்ளேயரா என்று கேட்டு நோஸ்கட் கொடுப்பது போல காட்சி வெளியாகி உள்ளது.

எல்லாரும் அழுவாங்கடா
அடுத்த காட்சியில், அபிஷேக் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துக்கொண்டு இருந்த சிபி செமயா பேசுறாண்டா என்கிறார். இதையடுத்து அங்கு வரும் அபிஷேக்கிடம்... மச்சான் நீ போயிட்டனா பிக் பாஸ் வீட்டில் இருக்குறவங்க எல்லாம் அழுவாங்க என்று கலாய்க்கிறார்.


Click it and Unblock the Notifications











