பிரியங்கா Gang-ல் இருந்து பிரியும் நிரூப்.. காரணம் என்ன… பிக் பாஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ !

சென்னை : பிக் பாஸ் தமிழின் ஐந்தாவது சீசன் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது, மேலும் சர்ச்சைகள் மெல்ல மெல்ல வெடிக்கத் தொடங்கியுள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றிரவு எபிசோடில் கமல்ஹாசன் மற்றவர்களைப் பாதிக்கும் அபிஷேக் ராஜாவின் விளையாட்டு முறையைக் கண்டித்தார். மேலும் மற்றவர்களைப் பற்றி புகார் செய்யும் போது பிரியங்காவை நியாயமாகவும் சரியாகவும் இருக்கும்படி கேட்டார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் பங்கேற்பாளர்கள் செய்த பல தவறுகளை சுட்டிக்காட்டினார். இதனால், நேற்றைய எபிசோட் பரபரப்புடன் சுவாரசியமாக உள்ளது.

16 போட்டியாளர்கள்

16 போட்டியாளர்கள்

பிக் பாஸ் வீட்டில், பிரியங்கா, அபிஷேக் ராஜா, இம்மான் அண்ணாச்சி, தாமரை செல்வி, சிபி சந்திரன், வருண், அபினய் வட்டி, பாவனி ரெட்டி, அக்ஷரா ரெட்டி, ராஜு ஜெயமோகன், சின்ன பொண்ணு, ஐக்கி பெர்ரி, சுருதி உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் வீட்டினுள் உள்ளனர்.

2வது ப்ரோமோ

2வது ப்ரோமோ

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில், பிரியங்கா, நிரூப் இடையே சண்டை நடைபெறுவது போல காட்சி வெளியாகி உள்ளது. அதில் பிரியங்கா... நீ அவர் கிட்டத்தானே கேட்டகனும் சொல்லிட்டல, நீ அவர் கிட்ட கேளு நான் அவர்கிட்ட பதில் கொடுக்கிறேன் என்கிறார். பிரியங்கா கூறியதை ஏற்காத நிரூப் தொடர்ந்து அவரிடம் கேட்கிறார். இதனால் ,ஆவேசமான பிரியாங்கா... நான் உன் ப்ரண்ட் என் காயினை என்கிட்ட இருந்து எடுத்து வச்சிக்கிட்டு என் கிட்டக்கூட சொல்லலையே இது இதுக்குதானு இதுதான் பதில் என்று கத்துகிறார். இவர்களை அபிஷேக் எவ்வளவு சமாதானப்படுத்தியும் இவர்கள் இருவரும் சமாதானம் அடையவில்லை என்பது ப்ரோமோவில் தெரிகிறது.

நிரூப்புடன் சண்டை

நிரூப்புடன் சண்டை

பிரியங்காவும் நிரூப்பும் வீட்டிற்குள் எப்போதும் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். தற்போது இவர்கள் இருவரும் சண்டைப் போட்டுக்கொள்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிரூப் செய்த தவறை பிரியங்கா சுட்டிக்காட்டியதால் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

ஆல்லெட் பிரச்சினை

ஆல்லெட் பிரச்சினை

போன வாரம் அக்‌ஷரா மற்றும் நிரூப்புக்கு ஆம்லெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், சூப்பரான ஆம்லெட் போட்டு தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு கொடுக்க வேண்டும். அக்‌ஷரா ஆம்லெட் போட்டு சின்ன பொண்ணுக்கு கொடுத்தார். நீருப் பிரியங்காவுக்கு கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், நிரூப், அண்ணாச்சிக்கு அதை கொடுத்தார். இதனால் அப்போதே நிரூப் மீது பிரியங்கா கோபப்பட்டு கத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X