காப்பாற்றப்பட்ட ஐக்கி பெர்ரி… பயத்தில் அபிஷேக்…வெளியானது முதல் ப்ரோமோ !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கமல் வருவதால், அது சிறப்பானதாகவே இருக்கும்.

அதுவும் , நேற்று எபிசோடில், போட்டியாளர்கள் அனைவர் இடத்திலும் கலந்துரையாடினார் கமல்.

குறிப்பாக அபிஷேக் மற்றும் பிரியங்காவிடம் கண்டிப்பு காட்டிய கமல், அவர்கள் செய்த தவறுகளை பட்டியலிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 3 வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. முதல் வாரத்தில் எந்த ஒரு நாமினேஷனும் இல்லாத நிலையில் எந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது. இதில் தாமரைச்செல்வி மற்றும் பாவனி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவருமே நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நாடியா பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சிறப்பு சிலுகை

சிறப்பு சிலுகை

இதையடுத்து நடந்த பஞ்சதந்திர காயின் டாஸ்க்கில் வெற்றி பெற்று காயினை வைத்துள்ளவர்களுக்கு சிறப்பான சலுகையை அறிவித்தார் பிக் பாஸ், அதில் நாணயம் வைத்திருக்கும் நபர்கள் தங்களையோ, தான் விரும்பும் நபரையோ காப்பாற்றலாம். அதே போல் தலைவர் போட்டியில் தேர்வான நபரின் பதவியை தலைவர் வைத்திருக்கும் நபர் பறித்து தனக்கு வேண்டிய ஒரு நபரையோ அல்லது தன்னையோ வீட்டின் தலைவராக நியமிக்கலாம் என்று கூறியிருந்தார்.

ஆண்டவரின் ஆட்டம்

ஆண்டவரின் ஆட்டம்

இதையடுத்து, சனிக்கிழமையான நேற்று கமல் வந்து, அபிஷேக் பஞ்சதந்திர டாஸ்கின் போது நடந்து கொண்ட முறை குறித்து பேசினார். அதேபோல, பிரியங்கா அக்ஷராவை கார்னர் பண்ணி பேசியது, சின்னப்பொண்ணுவிடம் நாணயம் இருக்கா என்று பரிசோதித்தது குறித்தும், அதேபோல பவானி மற்றும் அக்ஷரா இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்தும் பேசினார்.

காப்பாற்றப்படும் ஐக்கி

காப்பாற்றப்படும் ஐக்கி

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஐக்கி பெர்ரி மற்றும் அபிஷேக், சின்னப்பெண்ணு அமர்ந்து இருக்கிறார்கள். யார் போவாங்கனு எதிர்பார்க்குறீங்க... அது எல்லாம் கேட்கப்போவது இல்லை ஸ்ரைட்டா சொல்லிடுறேன் என்கிறார்... அதற்கு முன்பாக நான் ஒருவரை காப்பாற்ற வேண்டி உள்ளது என்று கூறி ஐக்கி பெர்ரியின் பெயரை கூறுகிறார் கமல். இதைடுத்து, ஐக்கி இந்த வாரம் காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது முதல் ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X