அதிகமானவர்களால் நாமினேட் செய்யப்பட்ட பிரியங்கா... வெளியானது முதல் ப்ரோமோ !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் , இந்தவாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கி உள்ளது.
இந்த நாமினேஷனில் பெரும்பாலானவர்கள் பிரியங்காவின் பெயரை நாமினேட் செய்வது ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.

விறுவிறுப்பான எபிசோட்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. சனிக்கிழமை போட்டியாளர்களிடம் கலந்து பேசிய கமல் அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி கண்டித்தார். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில், அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கமல் ஒவ்வொரு போட்டியாளராக காப்பாற்றி வந்த நிலையில் இறுதியாக அபிஷேக் ராஜா மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் லிஸ்டில் இருந்தனர்.

அபிஷேக் எலிமினேட்
அப்போது அபிஷேக் எலிமினேட் ஆனதாக கமல் கார்டை காட்டி அறிவித்தார். அதை சற்றும் எதிர்பார்க்காத பலரும் எமோஷ்னல் ஆனார்கள். குறிப்பாக ப்ரியங்கா அழ தொடங்கிவிட்டார். அப்போது பாவனி வந்து தான் காயினை கொடுத்து காப்பாற்றுவதாக சொல்கிறார். ஆனால் அபிஷேக் அதை வேண்டாம், மக்கள் என்னை இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள் என்றார்.

தேம்பி தேம்பி அழுதனர்
பிக் பாஸ் குறிக்கிட்டு இந்த நாணயத்தை இப்போது பயன்படுத்தக்கூடாது, சொல்லும் போது மட்டுமே பயன்படுத்த முடியும் என்று பிரச்சினையை முடித்து வைத்தார் . இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிலிருந்து அபிஷேக் வெளியேறினார் .அப்போது, பிரியங்கா , மதுமிதா அனைவரும் தேம்பி தேம்பி அழுதனர். கமலிடம் பேசிய அபிஷேக் நான் வெளியே போவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

இன்றைய எபிசோட்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 22வது நாளான இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கி உள்ளது. அதில் பிரியங்கா சின்னப்பொண்ணுவை நாமினேட் செய்து, அவங்க ஸ்வீட் ஹாட், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை, இருந்தாலும் நான் அவங்களை நாமினேட் செய்கிறேன் என்றார். அடுத்ததாக வந்த சின்னப்பொண்ணு, நிரூப், அக்ஷரா ஆகியோர் பிரியங்காவின் பெயரை நாமினேட் செய்துள்ளனர் இமான் அண்ணாச்சியின் பெயரை இசைவாணி, தாமரைசெல்வி நாமினேட் செய்வது மேல் காட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











