இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்… பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்… யார்… யாரை பழிதீர்க்க போறாங்களோ!

சென்னை : பிக் பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கி உள்ளது. இதில் ஏராளமானோர் பிரியங்காவை நாமினேட் செய்துள்ளனர்.

தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில் சரியான ட்விஸ்டை வைத்துள்ளார் பிக் பாஸ்.

அலப்பறை

அலப்பறை

பிக் பாஸ் வீட்டில் கமல் வந்த இரண்டு நாளும் வீட்டில் அனல் பறந்தது. பஞ்சதந்திர டாஸ்கின் போது ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் வீட்டிற்குள் ஒரே அலப்பறை கொடுத்துக்கொண்டு இருந்தனர். இதனால் போட்டியாளர்கள் இடையே மனகசப்பு ஏற்பட்டது.

செம அட்வைஸ்

செம அட்வைஸ்

சனிக்கிழமை வந்த கமல் போட்டியாளர்களை பல கேள்விகளை கேட்டு வாட்டி எடுத்தார். குறிப்பாக அபிஷேக்கிடம், நீங்க நிஜமாவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தது இல்லையா என்று கேட்டார், மேலும், அனைவர் இடத்திலும் உனக்காக காயினை எடுக்கிறேன்... உனக்காக காயினை எடுக்கிறேன் என்று சொன்னீர்கள் உண்மையில் யாருக்காக காயினை எடுத்தீர்கள் என்று கேட்டார். அதோடு விடுவார் என்று பார்த்தால் அப்படியே பிரியங்காவை பார்த்து... நீங்கள் சின்னப்பொண்ணிடம் அத்து மீறியது தவறு என்று சொல்லாமல் சொன்னார்.

எலிமினேட்

எலிமினேட்

இதையடுத்து, நேற்றைய எபிசோடில் அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டார். கமல் ஒவ்வொரு போட்டியாளராக காப்பாற்றி வந்த நிலையில் இறுதியாக அபிஷேக் ராஜா மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் லிஸ்டில் இருந்தனர். அப்போது அபிஷேக் எலிமினேட் ஆனதாக கமல் கார்டை காட்டி அறிவித்தார்.

2வது ப்ரோமோ

2வது ப்ரோமோ

இந்நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் வெளியாகி உள்ளது. இதில், தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில், இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற தேர்வான நபர்களின் பெயரை பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில், பாவனி , இசைவாணி, அபினய், இமான் அண்ணாச்சி, வருண் மற்றும் பிரியங்கா என்று கூறுகிறார். உங்கள் வசம் உள்ள நாணயத்தின் சலுகையை பயன்படுத்தி உங்களை காப்பாற்றிக் கொள்ள ஒரு நபரை தேர்வு செய்து உங்களுக்கு பதிலாக அவரை நாமினேட் செய்யணும் என்று கூறியுள்ளார். ஆத்தாடி இது என்ன பெரிய ட்விஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு பிக் பாஸின் இந்த அறிவிப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X