இதெல்லாம் ஒரு பிழைப்பா… திருடி தின்னலாமா... ஆவேசமாக கத்திய தாமரை !
சென்னை : பிக் பாஸ் வீட்டின் இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில்...இப்படி திருடி தின்னலாமா என்று ஆக்ரோஷமாக கத்தியுள்ளார் தாமரை.
தாமரையின் நாணயத்தை ஸ்ருதி திருடிய நிலையில் இன்றைக்கு வீட்டில் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

தாமரையை ஏமாற்றிய பாவனி
உடை மாற்றிக்கொண்டிருந்த தாமரைக்கு போக்குகாட்டி அவர் வைத்திருந்த காற்று நாணயத்தை அலேக்காக எடுத்துவிட்டார் ஸ்ருதி. இதனால் கடுப்பான தாமரை கேட்டு இருந்தாலே கொடுத்து இருப்பேன்..ஏன் பாப்பா எடுத்தே என்று ஒரே பிடியாக வசைபாடி விட்டார். நாணயத்தை எடுக்க உதவிய பாவனியையும் நீ செய்தது துரோகம் என்று ஒரே போடு போட்டார்.

சரியா தப்பா
இது கேம் இப்படித்தான் விளையாடுவாங்க என்று போட்டியாளர்கள் எவ்வளவு சமாதானப்படுத்தியும் தாமரை சமாதானம் ஆகவில்லை. சரி விடுங்க சரியா தப்பா என்று பிக் பாஸ் சொல்லட்டும் என்று விட்டுவிட்டனர்.

லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்
இதையடுத்து இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்தார். நகரமா? கிராமமா என்பதே டாஸ்க் இதற்காக ஹவுஸ்மேட்கள் இரண்டு அணிகளாக பிரிந்தனர். இந்த டாஸ்கிற்காக கார்டன் ஏரியாவில் செட் அமைக்கப்பட்டது. இதில், நகரத்தார் டீமுக்கு நிரூப்பும், கிராமத்தினர் டீமுக்கு அக்ஷராவும் தலைவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். நெருப்பு காயினை வைத்திருக்கும் இசைவாணி நடுவராக இருக்கிறார்

தொகை வழங்கப்படும்
இரு அணியிடமும் பிக்பாஸ் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அந்த தொகையை அன்றாட செலவுகளுக்கு இரு அணியினரும் பயன்படுத்த வேண்டும். மேலும் நகர அணிக்கு தனி உணவுகளும், கிராம அணிக்கு தனி உணவுகளும் வழங்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்தார். இதையடுத்து போட்டியாளர்கள் நடை உடைகளை மாற்றி கிராமமா... நகரமா ஒரு கை பார்த்துவிடுவோம் என் கோதாவில் குதித்துவிட்டனர்.

2வது ப்ரோமோ
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் ப்ரோமோ ஆரம்பிக்கும் போதே இதெல்லாம் ஒரு பிழைப்பா... திருடி தின்னலாமா...என ஆத்திரத்தில் கத்துகிறார் தாமரை. இதையடுத்து நிருப் நீ திருடல அதுக்கு பனிஷ்மென்ட் என்று ஐக்கி இடம் கூறுகிறார். இதையடுத்து இசைவாணியை அழைத்த பிக் பாஸ். ... நெருப்பு நாணயத்தை வைத்திருக்கும் நீங்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை. அந்த நாணயத்தை இன்னும் சுவாரசியமாக பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறுகிறார் . இதையடுத்து, கார்டன் ஏரியாவிற்கு வந்த இசைவாணி அனைவரையும் ஒரு அதட்டு அதட்டுகிறார்.


Click it and Unblock the Notifications











