நான் கேப்டன்…என்னை யாரும் மதிப்பதே இல்லை… தேம்பி தேம்பி அழுத மதுமிதா !
சென்னை : பிக் பாஸ் வீட்டின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் மதுமிதா தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்தின் கேப்டனாக மதுமிதா உள்ளார். நெருப்பின் ஆளுமை என்பதால் இந்த வாரம் வீட்டில் இசைவாணிக்கு கூடுதல் பவர் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் பந்து பிடிக்கும் போட்டியில் அதிக பந்தை பிடித்து வெற்றி பெற்ற மதுமிதா இந்த வாரம் வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

ஊரு விட்டு ஊரு வந்து
பிக் பாஸ் வீட்டில் நேற்று போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான லக்ஸூரி டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த சீசனில் வழங்கப்பட்ட நகரம் கிராமம் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. ஊரு விட்டு ஊரு வந்து என்கிற டாஸ்க்கிற்கு ஏற்ற வகையில் கார்டன் ஏரியாவில் செட்டப்கள் போடப்பட்டிருந்தன. நகரத்திற்கு தலைவர் நிரூப், கிராமத்திற்கு தலைவர் அக்ஷரா என பிக் பாஸ் அறிவித்தார்.

நீ மாறிட்ட
இந்நிலையில் காலையில் வெளியான முதல் ப்ரோவில் அண்ணாச்சி மட்டும் நான் என்ன சொன்னாலும் கேக்கவே மாட்டேங்குறாரு. ஓகே கேக்கலைன்னா நேரடியா கமல் சார் கிட்டயே பேசிக்க வேண்டியது தான் என்கிறார் இசைவாணி. நீங்க சொல்றத மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறீங்க என அக்ஷரா சொல்ல, நீ நல்ல பாட்டு பாடுறத மறந்த, இன்னொன்னு நல்லா பாசமா பேசிட்டு திடீர்ன்னு மாறிட்ட என பல குற்றச்சாட்டுகளை போட்டியாளர்கள் அவரின் மீது வைத்தனர்.

தேம்பி அழும் மதுமிதா
இதையடுத்து தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமிலும், இசைவாணி மீதே குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இதில், மது மிதா தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு இசைவாணி எது சொன்னாலும் கேட்பது இல்லை. யாருமே என் பேச்சை கேட்பது இல்லை. இது அவங்க வாரம் என்பதால் அவங்கதான் ரூல் பண்றாங்க, அவங்க என் போல கடுப்பில் இருக்காங்க நான் எதுவுமே பண்ணவில்லை என்று அழுகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











