எல்லாமே ஓரளவுக்குத்தான்… ரொம்ப அட்டூழியம் பண்ணாத… தாமரையை விளாசிய ராஜு!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் தாமரைக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் ராஜு.

பிக் பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷனில் 9 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இந்த வாரம் முழுக்க தாமரையின் வாரம் என்றே சொல்லலாம், எப்போ பார்த்தாலும் தாமரை ஆத்திரத்தில் பேசுவது, அழுவதே அதிகம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படுகிறது.

காயினை ஸ்ருதி திருடினார்

காயினை ஸ்ருதி திருடினார்

தாமரை உடை மாற்றும் போது ஸ்ருதி அவரின் காற்று காயினை திருடி விட்டார் இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ருதி மற்றும் அவருக்கு உதவிய பாவனி இருவரையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்து விட்டார். இவர்களை மற்ற போட்டியாளர்கள் சமாதானப்படுத்த முயன்ற போதும் பிரச்சினை தீராததால் இதுபற்றி இனியும் பேசவேண்டாம், கமல் சார் வரும் வரை காத்து இருக்கலாம் என சொல்லி இருதரப்பும் அமைதி ஆகினர்.

நீங்க அடக்கமா

நீங்க அடக்கமா

இதையடுத்து கிராமா... நகரமா தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திலும், ஸ்ருதியின் உடை குறித்தும் அவர் கிராமத்தில் பிறந்து இருந்தாலும் கிராமத்தை மறந்துவிட்டார் என்று தாமரை பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சிபி, கிராமத்தில் இருப்பவர்கள் ஸ்டைலான உடையை அணியக்கூடாதா என்றும், அதுமட்டும் இல்லாமல் உடை பற்றி பேசுவது தவறு என்றும்.. முதலில் நீங்க அடக்கமா இருக்கீங்களா என்றும் தாமரையின் முகத்திற்கு நேராக கேட்டார்.

சிபியிடம் சண்டை

சிபியிடம் சண்டை

இதனால் ஆத்திரம் அடைந்த தாமரை, சாப்பிட்டுக்கொண்டு இருந்த சிபியிடம் நான் என்ன அடக்கமா இல்ல... அசிங்கமா பேசுறேனே இல்லை.. உடையை அசிங்கமா போடுறேனா என்று கேட்டு சிபியிடம் ஒரு சண்டையைத் தொடங்கினார். இதையடுத்து அபினய் தலையிட்டு சிபி சாப்பிட்டதும் பேசிக்கொள்ளலாம் என் வாதத்தை முடித்து வைத்தார்.

எல்லாமே ஓரளவுக்குத்தான்

எல்லாமே ஓரளவுக்குத்தான்

இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், நீ ரொம்ப தெரியாம பேசுற ஓரளவுக்குத்தான் எல்லாரும் சகித்துக்கொள்ள முடியும்.. அதுக்கு அப்புறம் பிரச்சினை ஆய்டுச்சினா ஒன்னும் செய்ய முடியாது. உடனே கதவை திறந்து விடு வெளியில போறனு சொல்லுவே.. வெளியில போய் என்ன பண்ணுவ என்று ராஜு கேட்கிறார். இதற்கு தாமரை எங்க இருந்தேனே அங்க என்கிறார்.

அட்டூழியம் பண்ணாத

அட்டூழியம் பண்ணாத

ரொம்ப எதார்த்தமாக இருக்கிறேன் என்பதற்காக அட்டூழியம் பண்ணாத. எல்லாருக்கும் உன்னை பிடிக்கும், ஆனால் இவ என்ன கத்திகிட்டே இருக்கா என தோன்றும். நீ நியாயமாகவே நடந்து இருந்தாலும் வெளியில் இருப்பவர்களுக்கு அது நியாயமாக தெரியாது என ராஜு தாமரைக்கு அட்வைஸ் கூறி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X