twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளிக்கு பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்… எல்லாரும் நல்லவங்களா மாறிட்டாங்களே !

    |

    சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், தாமரையை எவிக்ஷன் பிராசஸிலிருந்து ஸ்ருதி காப்பாற்றுகிறார்.

    பிக் பாஸ் வீட்டில் போன வாரம் ஸ்ருதி, தாமரையின் காற்று நாணயத்தை திருடியதை அடுத்து வீட்டில் ஒரே பிரச்சனையாகவே சென்றது.

    அண்ணாத்த படத்தின் முழு ஆல்பம்... இன்று மாலை ரிலீசாகும் என அறிவிப்பு அண்ணாத்த படத்தின் முழு ஆல்பம்... இன்று மாலை ரிலீசாகும் என அறிவிப்பு

    கமல், இந்த பிரச்சினையில் தலையிட்டு பஞ்சாயத்து பேசியதை அடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    ஸ்ருதி திருடினார்

    ஸ்ருதி திருடினார்

    தாமரை உடை மாற்றிக்கொண்டு இருந்த போது, உள்ளே வந்த ஸ்ருதி தாமரையின் காற்று காயினை திருடி விட்டார். இதையடுத்து, உச்ச கட்ட ஆத்திரத்தில் இருந்த தாமரை, நீ கேட்டு இருந்தால் நானே கொடுத்து இருப்பேன்... அந்த இடத்தில் வந்து நீ எடுக்கலாமா என்றும்... நீ பண்ணது துரோகம் என்றும் சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தார்.

    மூவரும் பேசவில்லை

    மூவரும் பேசவில்லை

    ஸ்ருதி தாமரையிடம் பல முறை பேச முற்பட்ட போதும், தாமரை முகத்தில் அடிப்பது போல உன்கூட பேச எனக்கு விருப்பம் இல்லை, நீ என்கூட பேசாதே நான் இதைப்பற்றி கமலிடம் பேசிக்கொள்கிறேன் என கூறி விட்டார். இதையடுத்து, தாமரை, ஸ்ருதி, பாவனி மூவரும் வீட்டில் பேசிக்கொள்ளவே இல்லை.

    பிரச்சினை முடிந்தது

    பிரச்சினை முடிந்தது

    சனிக்கிழமை இந்த பிரச்சினையில் தலையிட்டு பேசிய கமல், இது விளையாட்டுத்தான் இருந்தாலும் அந்த இடத்தில், நீங்கள் நாணயத்தை எடுத்தது தவறு என்று கூறினார். மேலும், மாற்றி மாற்றி பேசிய , பாவனிக்கு சில அறிவுரைகளை கூறினார். இதையடுத்து தாமரையிடம் பேசிய கமல், உங்கள் வயதுக்கும் அனுபவத்திற்கும் ஸ்ருதியை மன்னிக்கும்படி கூறினார். இதையடுத்து ஒருவழியாக பிரச்சினை முடிந்தது.

    காப்பாற்றலாம்

    காப்பாற்றலாம்

    இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில் நாமினேஷன் பிராசஸ் தொடங்கி உள்ளது போல காட்டப்பட்டுள்ளது. இதில் பிக் பாஸ் வீட்டோட இரண்டு நபர்களை இந்த வாரம் எவிக்ஷன் பிராசஸிலிருந்து காப்பாற்றலாம் என பிக் பாஸ் கூறுகிறார். இதற்கு இமான் புரியவில்லை என்றார். இதையடுத்து பேசும் பிக் பாஸ், எந்த இரண்டு பேர் இந்த வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கனும்னு நீங்க நினைக்கிறீங்களோ அவங்களை நீங்கள் காப்பாற்றலாம் என்கிறார்.

    தாமரையை காப்பாற்றும் ஸ்ருதி

    தாமரையை காப்பாற்றும் ஸ்ருதி

    இதையடுத்து வரும் ஸ்ருதி, தாமரை அக்காவை காப்பாற்ற நினைப்பதாகவும், அவருக்கு இந்த மேடை மிகவும் முக்கியம் என்று கூறுகிறார். இதையடுத்து, வரும் அக்ஷரா, தாமரை மற்றும் ஐக்கியை காப்பாற்றுகிறார். இந்த வார நாமினேஷன் பிராசஸ் கார்டன் ஏரியாவில் நடைபெறுகிறது. தீபாவளி என்பதால் ராக்கெட் செட் போடப்பட்டுள்ளது.

    English summary
    Bigg Boss Tamil season 5 : Day 29th promo 3
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X