என்ன ஆச்சு.. எப்பவும் சரவெடி மாதிரிதானே இருப்ப.. பிரியங்காவை பார்த்து குமுறும் ரசிகர்கள்!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நிரூப், அக்ஷரா, பாவனி, இசைவாணி, சுருதி, மதுமிதா, ஐக்கி பெர்ரி, அபினய், சிபி ஆகிய 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் அபினய் அல்லது சுருதி வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக சினிமா சினிமா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் ஒரு சினிமா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

2வது ப்ரோமோ
இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோவில் நீலாம்பரி கேரக்டர் வழங்கப்பட்ட அக்ஷரா சரியாக பெர்ஃபார்ம் செய்யவில்லை என இமான் அண்ணாச்சி கூறுகிறார். இதனால், அக்ஷரா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.

அண்ணாச்சி பண்ணது தப்பு
இதையடுத்து தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், பிரியங்கா ராஜூ இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது, பிரியங்கா, இமான் அண்ணாச்சி அப்படி சொல்லி இருக்கக்கூடாது, அவ ரொம்ப கஷ்டப்பட்டா, எல்லாரையும் பாராட்டும் நேரத்தில் அண்ணாச்சி அப்படி செய்தது தவறு என்று கூறிக்கொண்டு இருக்கிறார்.

தனியாக புலம்பும் பிரியங்கா
இது எல்லாமே என் மைட்டுல இருக்கு என்று அந்த இடத்திலிருந்து நைசாக எஸ் ஆகி விடுகிறார் ராஜு. இதையடுத்து இந்த வீட்டில் சொன்னாலும் தப்பு, சொல்லணும்னு நினைச்சாலும், தப்பு சொல்லாட்டியும் தப்பு என்று தனியாக புலம்புகிறார் பிரியங்கா. இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

என்ன பிரியங்கா
பிரியங்காவின் தீவிர ரசிகர் ஒருவர், சொன்னாலும் தப்பு, சொல்லணும்னு நினைச்சாலும் தப்பு, சொல்லாட்டியும் தப்பு, பிரியங்கா, இந்த ஷோ அப்படித்தான்... ராஜு பாய் பேசிட்டு போ வேண்டியது தான், ஏன் பிரியங்கா இவ்வளவு லோவா இருக்க எப்பவும் சரவெடி மாதிரி தான இருப்ப. என பதிவிட்டுள்ளார்.

சரியான நோஸ் கட்
மற்றொரு நெட்டிசன், ராஜுக்கு சரியான நோஸ் கட் கொடுத்தீங்க பிரியங்கா என்றும், பிரியங்கா இனி நீ கலக்குமா, குரூப் ஜால்ரா வேலைக்கு ஆகாது என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











