பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்… ஹவுஸ்மெட்டுகள் இடையே அடிதடி சண்டை… கொந்தளித்த சிபி !
சென்னை :பிக் பாஸ் நிகழ்ச்சியின் 33வது நாளுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு இடையே அடிதடி தள்ளுமுள்ளு நிகழ்ந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர்.
தீபாவளி சிறப்பு கொண்டாட்டத்தில், விஜய் டிவி பிரபலங்களான மாகாபா ஆனந்த், மதுரை முத்து, பாலா, சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பலரும் வந்து பாட்டு பாடி. போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

தீபாவளி கொண்டாட்டம்
பிக் பாஸ் வீட்டி நேற்று தீபாவளித் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், போட்டியாளர்களுக்கு வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. மேலும் போட்டியாளர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்பட ம் ஏவியாக போட்டுக்காட்டப்பட்டது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறினர்.

ஆட்டம் பாட்டம்
இதையடுத்து, சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பலரும் வந்து பாட்டு பாடி. போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். சூப்பர் சிங்கர்ஸ் பாட்டுப்பாடி போட்டியாளர்களை உற்சாகமாக ஆட்டம் போடவைத்தனர். 4 மணி நேரமாக நடைபெற்ற இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மதுரை முத்து கலந்து கொண்டு போட்டியாளர்களுடன் கலந்து உரையாடினார். இதையடுத்து, மாபாகா ஆனந்த் சிறப்பு விருந்தினராக வந்தார். அவரை பார்த்த பிரியங்கா கண்ணீருடன் வரவேற்றார்.

செண்பகமே செண்பகமே
பிக் பாஸ் வீட்டில் அடுத்த வார தலைவருக்கான டாஸ்க் நடைபெறுகிறது. செண்பகமே செண்பகமே என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பால் கறக்கு பணியில் ஈடுப்படுகின்றனர். இதில் போட்டியின் முடிவில் எந்த அணி அதிக பால் வைத்துள்ளதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். மேலும் சிறப்பாக செயல்பட்ட இருவர், தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள்

ரணகளமான பிக் பாஸ் வீடு
இதையடுத்து இன்றைய நிகழ்ச்சிக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், போட்டியாளர் ஒருவரை ஒருவர் முட்டித்தள்ளிக்கொண்டும், அடித்து பிடித்து பால் கறக்கின்றனர். அண்ணாச்சி பாலை எடுத்துவிட்டதாக கூறி, தாமரை , அக்ஷரா இருவரும் இடையே சண்டை போடுகின்றனர். இந்த டாஸ்க்கால் பிக் பாஸ் வீடிடோ ரணகளமாகிறது.


Click it and Unblock the Notifications











