நீங்கள் தான் குரூப் சேர்க்கிறீர்கள்… அண்ணாச்சியிடம் எகிறிய அபிஷேக்… அதிரவைக்கும் 3வது ப்ரோமோ!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் 3வது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக எந்தவித சண்டையும் இல்லாமல் அமைதியாக போட்டியாளர்கள் தங்கள் வேலைகளை செய்து வந்தனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக மலேசிய மாடல் நாடியா சாங் அதிக வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார்.

16 போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இதில் நமீதா மாரிமுத்து, சொந்தக் காரணமாக வெளியேறினார் என்று மட்டுமே கூறப்பட்டது. எதற்காக வெளியேறினார் என்பது ரகசியமாகவே உள்ளது. இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருந்தனர். நேற்று நாடியா சாங் வெளியேறி உள்ளதால் தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

கேப்டனுக்கான டாஸ்க்
கடந்த வாரம் நடைபெற்ற பலூன் டாஸ்கில் இறுதிவரை பலூன் உடையாமல் பாதுகாத்து வைத்திருந்த தாமரை பிக் பாஸ் வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று இந்த வாரத் தலைவருக்கான டாஸ்க் நடைபெற உள்ளது. அந்த டாஸ்கின் போது அண்ணாசி மற்றும் அபிஷேக் இடையே காரசாரமான சண்டை நடந்துள்ளது தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில் தெரிய வந்துள்ளது

டாஸ்க்கை ஒழிச்சிட்டீங்க
அதில், வருண் அண்ணாச்சியிடம் எதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருக்காதீங்க என்கிறார். இதற்கு அண்ணாச்சி, நீங்க சிரிக்க வைக்க முயற்சி பண்ணுங்க தம்பி என்கிறார். இதையடுத்து, மிகுந்த கோவத்துடன் வரும் அபிஷேக் ஒட்டுமொத்த டாஸ்க்கையும் ஒழிச்சிட்டீங்க என்று கத்துகிறார். இதனால், அபிஷேக்கிற்கும் அண்ணாச்சிக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி, நீ பெரிய புத்திசாலிமாதிரி என்கிட்ட பேசாதே என்று சீறுகிறார் அண்ணாச்சி...

எனக்கு கவலையே இல்லை
அய்யோ.... போங்க அண்ணாச்சி சும்மா புத்திசாலி... புத்திசாலினு ஏன் என்னை தள்ளிக்கிட்டே இருக்குறீங்க... நீங்க தான் குரூப் சேர்க்குறீங்க... உங்களுக்கு ராஜு தான் முக்கியம்... நான் முக்கியம் இல்லைனா பரவால.. எனக்கு கவலையே இல்லை, இப்போ போக சொன்னாலும் நான் சந்தோஷமா வீட்டுக்கு போவேன் எனக்கு பளு இருக்கு நான் வெளியில போய் எதாவது பண்ணிப்பேன் என்றார். அபிஷேக், இப்படி கோவமாக பேசும் போது பிரியங்கா இதெல்லாம் டூமச் இப்படி பேசாதே என்கிறார். நான் அப்படித்தான் பேசுவேன் என்று முகத்தில் அடிப்பது போல அபிஷேக் பேசுகிறார். இப்படி வெளியாகி உள்ள இந்த 3வது ப்ரோமோவால் அண்ணாச்சி நேற்று கமலிடம் சொன்னது போல இன்றிலிருந்து வீட்டில் தரமான சம்பவம் இருக்கு.


Click it and Unblock the Notifications











