இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. இவங்களாம் கன்ஃபார்மாம்.. பிக் பாஸ் சீசன் 5 எப்படி இருக்கப் போகுதோ?

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அடுத்த ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 3ம் தேதி கோலாகலமாக தொடங்கப் போகிறது.

Recommended Video

Enna Vazhka da Album launch | Rakshan | Gp muthu | All Vijay Tv Celebrities | Filmibeat Tamil

அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு வரும் சனிக்கிழமை பூந்தமல்லியில் உள்ள இவிபி சிட்டியில் நடைபெறவிருக்கிறது.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் நிகழ்ச்சியை நேரில் பார்க்க இந்த முறை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

இதுவரை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் மக்களின் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 5 வரும் அக்டோபர் 3ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாக உள்ளது. இந்த முறை அதிகம் பரிட்சையமில்லாத பல புது முகங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள நிலையில், நிச்சயம் இந்த சீசன் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷகீலா மகள்

ஷகீலா மகள்

குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு கலக்கிய நடிகை ஷகீலா பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மகள் மிலா இந்த சீசனில் கலந்து கொள்ள போவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என மிலாவும் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாமல் உள்ள நிலையில், அவர் வருவது உறுதியாகி உள்ளது.

நமீதா மாரிமுத்து

நமீதா மாரிமுத்து

மற்றொரு திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மிலா மற்றும் நமீதா மாரிமுத்து இந்த சீசனை முற்றிலும் மாறுபட்டதாக கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுத்தால் இருவரும் மக்கள் மனங்களை வென்று விடுவார்கள் என்பது நிச்சயம்.

பிரியா ராமன்

பிரியா ராமன்

கடந்த சீசனில் சீனியர் நடிகை ரேகா கலந்து கொண்டது போல இந்த சீசனில் நடிகை பிரியா ராமன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தனியாக ஒரு சொகுசு ஹோட்டலில் குவாரண்டைனில் உள்ளனர் என்கிற தகவல்களும் கசிந்துள்ளன.

காமெடிக்கு

காமெடிக்கு

இந்த சீசனில் காமெடியில் கலக்க இமான் அண்ணாச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் கலந்து கொள்ள உள்ளார். ஜிபி முத்து இல்லாத நிலையில், இமான் அண்ணாச்சி பிக் பாஸ் ரசிகர்களை தனது ஸ்டைலில் மகிழ்விப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. யாருடன் இணைந்து இவர் டான்ஸ் ஆடப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்.

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே

போன சீசனில் தொகுப்பாளினி அர்ச்சனா கலந்து கொண்டு ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் மாற்றியது போல இந்த சீசனில் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான பிரியங்கா தேஷ்பாண்டேவின் வருகை இருக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் வரவில்லை என அறிவிக்கப்பட்ட இவரிடம் விஜய் டிவி நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக கடைசியாக ஓகே சொல்லி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சீசனுக்கான டஃப் போட்டியாளர்களில் இவரும் ஒருவராக நிச்சயம் திகழ்வார்.

சார்பட்டா நடிகர்

சார்பட்டா நடிகர்

சார்பட்டா படத்தில் சிறப்பாக நடித்து அசத்திய நடிகர் சந்தோஷ் பிரதாப் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்கப் போகிறார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சார்பட்டா படத்திற்கு பிறகு சந்தோஷுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியும் நிலையில், தன்னை இன்னமும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்ய ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்த உள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பவானி ரெட்டி

பவானி ரெட்டி

இந்தி படங்கள், சீரியல்களில் நடித்து கலக்கிய பவானி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, சின்னதம்பி மற்றும் சன் டிவியின் ராசாத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். கடந்த சீசனில் சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் கலக்கியது போல இந்த சீசனில் பவானி ரெட்டி கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேற யாரெல்லாம்

வேற யாரெல்லாம்

இவர்களை தவிர நிரூப் நந்தகுமார், கோபிநாத் ரவி, அபிஷேக் ராஜன் உள்ளிட்ட பெயர்களும் இந்த சீசனில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் உத்தேச பட்டியலில் இருக்கும் பெயர்களாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சீசனிலும் ஷாலு ஷம்மு, பிரிட்டன் தொழிலதிபர் ரேணுகா பிரவீன் உள்ளிட்ட பெயர்களும் அடிபடுகின்றன.

சனிக்கிழமை லீக்காகிடும்

சனிக்கிழமை லீக்காகிடும்

வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிரம்மாண்ட தொடக்க விழா நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சனிக்கிழமையே ஷூட் செய்யப்படும் நிலையில், யாரெல்லாம் பங்கேற்றுள்ளனர் என்பது பெருமளவில் புகைப்படங்களாகவே இணையத்தில் கசிந்து விடும்.. காத்திருப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X