Don't Miss!
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- News
7 பேர் மட்டும் தான் தமிழர்களா? பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் நாளை அறப்போராட்டம்!
- Finance
2 நிமிடங்களில் கடனுக்கான ஒப்புதல்.. ஹெச்டிஎஃப்சி கொடுத்த சூப்பர் அறிவிப்பு..!
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்கள எல்லோரும் ஈஸியா ஏமாத்திருவங்களாம்... முட்டாள்த்தனம் இவங்ககூடவே பிறந்ததாம்...!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே... அடி தூள் சிறப்பு விருந்தினர் இவரா ?
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்க உள்ளது.
இதில் ராஜூ, பிரியங்கா, நிரூப்,பாவனி, அமீர் டாப் 5 போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
கோலாகலமாக நடக்க உள்ள நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளது தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.
பிக்
பாஸ்
வீட்டில்
இருந்து
வெளியேறிய
நிரூப்..
ராஜு
அம்மா,
தாமரை,
ஐக்கியுடன்
செம
போஸ்!

பிக் பாஸ் சீசன் 5
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முன்பு நடந்த சீசன்களை போல் சுவாரசியம் இல்லாமலே தொடங்கியது. பிரியங்கா, அண்ணாச்சியைத் தவிர அனைவருமே அறிமுகம் இல்லாத பிரபலங்கள் என்பதால் சீசன் 5க்கு ரசிகர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர்.

சூடுபிடித்தது
50 நாட்களை கடந்த பின்பே இந்த நிகழ்ச்சி சற்று சூடுபிடித்தது குறிப்பாக அமீர்,சஞ்ஜீவ் என்ட்ரிக்கு பிறகே நிகழ்ச்சியில் விறுவிறுப்பு கூடியது. முந்தய சீசனைப்போல டாஸ்கும் பெரிதாக எதுவும் இல்லாமல், பிரியங்கா, தாமரை சண்டை அமீர், பாவனி லவ் ட்ராக்கை வைத்தே இந்த சீசனை முடித்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் ஆதங்கப்பட்டு வருகின்றனர்

இன்று ஃபினாலே
இந்நிலையில் இன்று மாலை 6.30 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி கோலாகலமாக ஒளிபரப்பாக உள்ளது. அதாவது வழக்கமாக கிராண்ட் ஃபினாலே நேரலையில் ஒளிபரப்பாகும், இதில் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள்.

ரசிகர்கள் ஆர்வம்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் நேற்றே முழு நிகழ்ச்சியின் ஷூட்டிங்கும் முடிந்து டைட்டில் வின்னர் ராஜூ என்பது தெரிந்து விட்டது . இருப்பினும், ஃபினாலேவில் யார் யார் கலந்து கொண்டார்கள், யார் நடன மாடினார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் .

சிவகார்த்திகேயன்
கிராண்ட் ஃபினாலேவுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிவகார்த்திகேயன் மாஸாக நடந்து வந்து இறுதி போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு, என்னால் போன் இல்லாமல் 3 மணிநேரம் கூட இருக்கவே முடியாது, ஆனால் இவர்கள் 100 நாட்கள் இருந்து இருக்கிறார்கள் இவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.